தென்பகுதியில் பொலிஸ் நிலையத்தின் ஒரு பகுதிக்கு பூட்டு
corona
police station
closed
pananthurai
By Sumithiran
பாணந்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் பொலிஸாருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து குறித்த பொலிஸ் நிலையத்தின் ஒரு பகுதி மூடப்பட்டுள்ளது.
இரண்டு பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் நான்கு அதிகாரிகள் என 6 பேர் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் குறித்த பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டு அதன் ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
எனினும், பாணந்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தின் பிற பிரிவுகள் வழக்கம் போல் கடமையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி