பொன். சிவகுமாரின் 52ஆவது நினைவேந்தல் நிகழ்வு
Sri Lankan Tamils
Jaffna
By Theepan
தியாகி பொன் சிவகுமாரனின் 52 ஆவது நினைவேந்தல் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் உரும்பிராயில் உள்ள அவரது நினைவிடத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.
இதன்போது சுடரேற்றி பொன் சிவகுமாரனது சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
அஞ்சலி நிகழ்வில் அரசியல் தலைவர்கள், சிவில் சமூக தலைவர்கள் பொதுமக்கள் என பல்வேறு தரப்புகளும் கலந்து கொண்டனர்.
பொன்.சிவகுமாரன் ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒரு முன்னோடி ஆவார். யாழ்ப்பாணம், உரும்பிராயில் காவற்துறையினரின் சுற்றி வளைப்பில் நஞ்சருந்தி 1974 யூன் 5ம் திகதி மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்