கோட்டாபயவின் முடிவால் கடும் நெருக்கடியில் கெஹலிய - பதவி விலகவும் திட்டம்?
அரசாங்க மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதற்கு டொக்டர் பிரசன்ன குணசேன(Dr. Prasanna Gunasena) எடுத்த முடிவை ஒரு மாதத்திற்கு ஒத்திவைக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய (gotabaya)விடுத்த கோரிக்கையால் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல(Kehaliya Rambukwella) பெரும் சிரமத்தை எதிர்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
டொக்டர்பிரசன்ன குணசேன இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாகவும், அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுடனான கருத்து வேறுபாடுகளே இதற்கு வழிவகுத்ததாகவும் ஊடகங்கள் முன்னர் செய்தி வெளியிட்டிருந்தன.
அதன்படி, நேற்று வரை கெஹலிய ரம்புக்வெல்லவின் தரப்பு வெற்றி பெற்றதாகத் தோன்றினாலும், ஜனாதிபதியின் தலையீட்டால் நிலைமை மாறியுள்ளது.
தற்போதைய நிலைமை காரணமாக கெஹலிய ரம்புக்வெல்ல அமைச்சர் பதவியில் இருந்து விலகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு வட்டாரங்கள் சுட்டிக்காட்டுவதாக தென்னிலங்கை ஊடகமொன்று தெரிவித்துள்ளது.