விரைவில் நுவரெலியாவில் ஏற்படப்போகும் பாரிய மாற்றம்!
srilanka
nuwara eliya
prasanna ranatunga
By Vasanth
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான புதிய சுற்றுலாத் தளமாக நுவரெலியா மாற்றமடைய உள்ளது என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் நுவரெலியாவை விரைவில் சுற்றுலா வலயமாக அறிவிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
நானு-ஓயாவில் இருந்து நுவரெலியா வரையில் கேபிள் கார் திட்டத்திற்காக 52 மில்லியன் யூரோ ஒதுக்கிடப்பட்டுள்ளதுடன், அந்த திட்டத்தை பீதுருதாலகால மலை வரையில் விஸ்தரிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
அத்துடன், நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் இதுவரையில் 318 சுற்றுலாத்தளங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி