கர்ப்பிணித்தாய்மாருக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவித்தல்

covid pregnant advise
By Sumithiran May 08, 2021 09:11 PM GMT
Report

தற்போது அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்றினால் 130 கர்ப்பிணித்தாய்மாருக்கு கொரோனா தொற்றியுள்ளதாகவும் அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த நிலையில் கர்ப்பிணித் தாய்மார் கொவிட் தொற்று பரவும் இக்காலத்தில் மிக அவதானமாக செயற்பட வேண்டுமென அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கர்ப்பிணியான நீங்களும், கருவிலுள்ள உங்கள் சிசுவும் ஆரோக்கியமாக இருப்பது மிக அவசியம். இதற்காக கொவிட் தொற்று பரவும் இக்காலத்தில் சுகாதாரப் பாதுகாப்பு வழிமுறைகளை உறுதியாக கடைப்பிடிப்பதும் , உரிய சுகாதார ஆலோசனைகள் மற்றும் சேவைகளைப் பெற்றுக் கொள்வதும் அவசியமாகும்.

கர்ப்பிணித் தாய்க்கு கொவிட் தொற்று ஏற்பட்டால் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதால், அத்தியாவசிய காரணங்களை தவிர வேறு எச்சந்தர்ப்பத்திலும் எதற்காகவும் வீட்டை விட்டு வெளியேறாதீர்கள். சாய்சாலைக்கு(கிளினிக்) அல்லது வைத்தியசாலைக்கு செல்ல நேர்ந்தால் , கொவிட்19 நோயிலிருந்து தவிர்ப்பதற்காக கீழ்வரும் ஆலோசனைகளை உறுதியாக கடைப்பிடியுங்கள்.

1. காற்றோட்டமற்ற இடத்தில் தரித்திருப்பதை இயன்றளவு தவிர்த்தல்.

2. எப்பொழுதும் உரியவாறு முகக்கவசத்தை அணிதல்.

3. நபர்களுக்கிடையான தூரத்தை உரியவாறு பேணல்.

4. மரண உற்சவம் போன்ற சன நெரிசல் மிக்க இடங்களுக்கு செல்லாதிருத்தல்.

5. எப்போதும் சவர்க்காரம் இட்டு இரு கைகளையும் கழுவி சுத்தமாக வைத்திருத்தல்.

கொவிட் நோய் பயத்தின் காரணமாக கர்ப்பிணித் தாய்மார் உரியவேளைகளில் கிளினிக்கிற்கு செல்வதிலும் மற்றும் சிகிச்சைகளைப் பெறுவதிலும் , தாமதமாவது காணக் கிடைக்கின்றது. இத் தாமதத்தின் காரணமாக கர்ப்பிணித் தாயினதும் கருவிலுள்ள சிசுவினதும் ஆரோக்கியத்திற்கு இடையூறு ஏற்படலாம்.

கொவிட் ஆபத்து அதிகரிக்கும் காலத்தில் வழமையான சுகாதார சேவைகளை வழங்கப்படுவதற்கு இயலாத நிலைமை இருக்க முடியும். ஆதலால், உங்களுடைய சுகாதார வைத்திய அதிகாரி அவர்களை அல்லது குடும்ப நல சுகாதார உத்தியோகத்தரை தொடர்புகொண்டு, மேற்குறித்த சேவைகளை தற்போது பெறக்கூடிய வழிமுறைகள் தொடர்பில் இன்றே அறிந்து கொள்ளுங்கள்.

"கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய ஆபத்தான சமிக்கைகள் " தொடர்பில் நீங்கள் இப்போதே அறிந்திருக்கக் கூடும். மீண்டுமொருமுறை அவற்றை ஞாபகப்படுத்துவதென்றால், காய்ச்சல், குருதிப்பெருக்கு, கடுமையான தலையிடி, மூச்செடுப்பதில் கஷ்டம், பார்வைக் குறைவு , வலிப்பு, நெஞ்சில்/வயிற்றில் வேதனை, சிசுவின் துடிப்புக் குறைவு, உடல் வீக்கம், அத்துடன் வேறு ஏதாவது கடினமான அசௌகரிய நிலை ஆபத்து சமிக்கைகளாக அடையாளம் காணப்பட முடியும்.

இவ்வாறான ஆபத்தான சமிக்கை தோன்றினால் உடன் வைத்தியசாலைக்கு செல்வது கட்டாயமாகும். அது தொடர்பில் உங்களுடைய குடும்ப நல சுகாதார உத்தியோகத்தருக்கு அறிவியுங்கள். கர்ப்பிணியான உங்களுடைய பாதுகாப்பு தொடர்பாக,கொவிட் நோய்த் தொற்றிலிருந்து உங்களை தவிப்பதற்குரிய உரிய சகல ஏற்பாடுகளும் வைத்தியசாலையில் செய்யப்பட்டுள்ளது. ஆதலால் அவசிய வைத்திய சிகிச்சை பெற்றுக்கொள்ள ஒருபோதும் தயங்கவேண்டாம்.

உங்களுடைய குடும்ப அங்கத்தவர் ஒருவர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தால் அல்லது கொவிட் நோயாளி என சந்தேகிக்கப்படும் நபரொருவர் உங்கள் வீட்டில் வசித்தால் அது தொடர்பாக உடனடியாக உங்களுடைய குடும்ப நல சுகாதார உத்தியோகத்தருக்கு அறிவியுங்கள். உங்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக முடிந்தவரை அவரிலிருந்து விலகி இருங்கள்.

தற்செயலாக, உங்களுக்கு ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் கொரோனா நோய் அறிகுறி உள்ளதாக சந்தேகித்தால் உடனடியாக உங்கள குடும்ப நல சுகாதார உத்தியோகத்தருக்கு அறிவியுங்கள். அவசிய சிகிச்சைகளை உடனடியாகப்பெறுங்கள்.

வைத்தியசாலைக் கட்டமைப்பு உங்களுக்காக தயார் நிலையில்......

இச்சகல நிகழ்வுகளுக்கிடையே உங்களுக்கு ஏதாவது மன உளைச்சல் தோன்ற முடியும். அதை தவிர்ப்பதற்காக, மனதை எப்போதும் நிதானமாகவும் தெளிவாகவும் வைத்திருக்க முயற்சி செய்யுங்கள்.

தேவைப்படும் எந்தநேரத்திலும் உங்களுடைய குடும்ப நல சுகாதார உத்தியோகத்தரை அல்லது 1999 சுவசெரிய தொலைபேசி சேவையினூடாக வைத்தியரொருவரை தொடர்பு கொண்டு உங்களுடைய பிரச்சனை தொடர்பான காரணங்களை கலந்தாலோசிக்கவும் முடியும்.

இத்தகவல்களை இலங்கையிலுள்ள சகல தாய்மாரினதும் மற்றும் எதிர்கால சிறுவர் பரம்பரையினரினதும் நல்வாழ்விற்காக பகிருமாறு நாம் உங்கள் சகலரையும் வேண்டுகிறோம்.

ReeCha
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி