மீண்டும் யாழிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி
Jaffna
Anura Kumara Dissanayaka
Sri Lanka
Northern Province of Sri Lanka
By Raghav
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) எதிர்வரும் முதலாம் திகதி யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளார் என நம்பகரமான வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
தான் ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருடம் நெருங்கும் நிலையில், வடக்கில் முக்கிய பல அபிவிருத்தி திட்டங்களையும், உட்கட்டமைப்பு மேம்பாடுகளையும் செய்வதற்கு ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார்.
ஜனாதிபதி
இதன் ஆரம்பகட்டமாக யாழ். குறிகாட்டுவான் இறங்குதுறைமுகத்தை விஸ்தரிப்பதற்குரிய நடவடிக்கையை ஜனாதிபதி யாழ்.விஜயத்தின்போது ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
அத்துடன், காரை நகர் உட்பட யாழில் கரையோரப்பகுதிகளில் கடற்றொழிலாளர்களின் நலன்கருதி பல திட்டங்களும் ஆரம்பித்துவைக்கப்படவுள்ளன.
மேலும் பல சந்திப்புகளையும் ஜனாதிபதி யாழ்.விஜயத்தின்போது நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி வெள்ளி, சக கிடாய் வாகன உற்சவம்


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 4 நாட்கள் முன்

11 மாதங்கள்:அநுர அராங்கம் சொன்னபடிநடந்து கொண்டதா?
6 நாட்கள் முன்
மரண அறிவித்தல்