நாட்டை வந்தடைந்த ஜனாதிபதி அநுர
ஜப்பான் மற்றும் ஐக்கிய அமெரிக்காவுக்கான தனது உத்தியோகபூர்வ விஜயங்களை முடித்துக்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) நாட்டை வந்தடைந்துள்ளார்
அதன்படி, அவர் இன்று காலை (10) 9:30 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை (BIA) வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜப்பானுக்கான விஜயத்துக்கு முன்னர், ஜனாதிபதி அமெரிக்காவில் (USA) நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்துகொண்டிருந்தார்.
அரசாங்க அதிகாரிகள் அடங்கிய குழு
இந்த விஜயத்தில் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) மற்றும் பல சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகள் அடங்கிய குழுவினர் ஜனாதிபதியுடன் பயணித்திருந்தனர்.
இந்தக் குழுவினர் தாய்லாந்தின் பாங்கொக்கில் இருந்து சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானமான UL-403 மூலம் விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
