ஜனாதிபதியை சந்தித்த அனோஜனின் பெற்றோர்...! அநுர வெளியிட்ட தகவல்
Anura Kumara Dissanayaka
Sri Lanka Politician
Sri Lanka
By Shalini Balachandran
அனோஜனின் விடுதலைக்காக முழுமையான ஆதரவு மற்றும் ஒத்துழைப்பை நல்குவதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சவூதி அரேபியாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் பெற்றோர் இன்று (21-09-2026) ஜனாதிபதியை சந்தித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக அவர்கள் எதிர்க்கட்சி தலைவரை சந்தித்து உரையாடியிருந்தனர்.
குடும்ப உறுப்பினர்கள்
இந்நிலையில், சவூதி தூதுவராலயத்திற்கு சென்ற நிலையில் அங்கே கடிதம் கையளிப்பது பின்போடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அந்த நேரத்தில் ஜனாதிபதியை சந்திப்பதற்கான அழைப்பு வந்ததாகவும் ஒரு மணியளவில் ஜனாதிபதியை குடும்ப உறுப்பினர்கள் சந்தித்து உரையாடியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
you may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
4ம் ஆண்டு நினைவஞ்சலி