பயங்கரவாத தடைச் சட்டம் முழுமையாக நீக்கப்படக்கூடாது - மேற்குலக நாடுகளுக்கு பதில்

law sri-lanka prevention terriesm
By Vanan Jul 21, 2021 02:19 PM GMT
Report

மேற்குலக நாடுகள் கூறுவதைப் போன்று பயங்கரவாத தடைச் சட்டம் முழுமையாக நீக்கப்படக்கூடாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எனினும் பிரித்தானியா உள்ளிட்ட ஏனைய நாடுகள் பயங்கரவாதத்தை தடுப்பதற்காக அறிமுகப்படுத்தியுள்ள சட்டங்களை ஆராய்ந்து அதற்கேற்றவாறு, உள்நாட்டு சட்டத்தை திருத்தியமைக்க வேண்டுமென அந்த ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளனவா என்பது குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம், நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் தொடர்பாக இலங்கையில் அமைக்கப்பட்ட முன்னைய ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்களின் தீர்மானங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையே ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமைகள், சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் மற்றும் இதுபோன்ற கடுமையான குற்றங்கள் குறித்த முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் அல்லது குழுக்களினால் வெளிக்கொண்டுவரப்பட்ட விடயங்கள் குறித்து விசாரணை செய்தல், அறிக்கையிடல் அல்லது தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காகவும் இந்த ஆணைக்குழு அமைக்கப்பட்டது.

இந்நிலையில், பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற கருத்துடன் உடன்படாத ஆணைக்குழு, பிரித்தானியா உள்ளிட்ட ஏனைய நாடுகள் பயங்கரவாதத்தை தடுப்பதற்காக அறிமுகப்படுத்தியுள்ள சட்டங்களை ஆராய்ந்து, இச்சட்டம் திருத்தப்பட வேண்டும் என தனது இடைக்கால அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் 9, 11 மற்றும் 13ஆம் பிரிவுகள் குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ள ஆணைக்குழு, சட்டத்தை கூடிய ஜனநாயக முறையில் நடைமுறைப்படுத்துவது தொடர்பான மூன்று முன்மொழிவுகளையும் முன்வைத்துள்ளது.

இச்சட்டத்தின் 9ஆவது பிரிவின் ஊடாக தடுத்து வைத்தல் நடவடிக்கைகளை செயற்படுத்தும் போது, குறைந்தது மூன்று மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலம்வரையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்கள் தொடர்பாக குற்றப் பத்திரங்களை தாக்கல் செய்து வழக்கு விசாரணைகளை நிறைவு செய்ய அந்த ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

மேலும், 11 ஆவது பிரிவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை சிறைச்சாலைகளில் தடுத்து வைப்பதற்கு பதிலாக, விசேட பாதுகாப்பின் கீழ் அவர்களின் சொந்த வீடுகளிலோ அல்லது கிராமங்களிலோ தடுத்து வைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறித்தும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

13ஆவது பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்குவதற்காக, குறைந்தபட்சம் மூன்று உறுப்பினர்களை கொண்ட, அனைத்து இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு ஆலோசனை சபையை நியமிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும், ஆணைக்குழு தனது இடைக்கால அறிக்கையின் ஊடாக முன்மொழிந்துள்ளது.

ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை, அடுத்த ஆறு மாதங்களுக்குள் சமர்ப்பிப்பதற்கும் முன்னைய ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்களின் தீர்மானங்களை மதிப்பீடு செய்வதற்கும், அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கும், ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி மாதம் 21ஆம் திகதி மற்றும் பெப்ரவரி மாதம் 12ஆம் திகதிகளில் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி மூலம், இந்த ஆணைக்குழுவுக்கான உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.

உயர் நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸை தலைவராகக் கொண்ட இந்த ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக, ஓய்வுபெற்ற பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ, ஓய்வுபெற்ற மாவட்டச் செயலாளர் நிமல் அபேசிறி மற்று யாழ். முன்னாள் மேயர் யோகேஷ்வரி பற்குணராஜா ஆகியோர் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ReeCha
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

20 Sep, 2010
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில், Stockholm, Sweden

30 Aug, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Villeneuve-Saint-Georges, France

20 Sep, 2024
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Toronto, Canada

14 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், துன்னாலை, வல்வெட்டி, துணுக்காய், கொழும்பு, வவுனியா

20 Sep, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
கண்ணீர் அஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

17 Sep, 2000
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

28 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Kokuvil, Scarborough, Canada

16 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மதவுவைத்தகுளம், பாவற்குளம், கரம்பைமடு

16 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025