வவுனியாவில் பயங்கரவாத தடைச் சட்டத்தினால் தடுத்துவைக்கப்பட்டுள்ள 16 பேருக்கு கொரோனா
Covid-19
Vavuniya
Prisons
By Vasanth
வவுனியாவில் இன்றைய தினம் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பயங்கரவாத தடைப்பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்ட ஒருவருக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்ட ஏனையவர்களிற்கு பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு முடிவுகள் இன்றையதினம் வெளியாகியிருந்தன. இதன் அடிப்படையில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்ட 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை நாளையதினம் பயங்கரவாத தடுப்பு பிரிவினருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி