நேபாள சிறையில் இருந்து நூற்றுக்கணக்கில் தப்பியோடிய கைதிகள்
நேபாளத்தில் (Nepal) நடைபெற்ற இளைஞர் போராட்டத்திற்கு பின் சிறைகளில் இருந்து 540 இந்திய கைதிகள் தப்பியோடியுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
அண்டை நாடான நேபாளத்தில் ஊழல் மற்றும் சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து அந்நாட்டில் போராட்டம் வெடித்தது.
இந்த போராத்தை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது 76 பேர் கொல்லப்பட்டனர்.
இளைஞர்கள்
இந்த நிலையில், நேபாளத்தில் இளைஞர்கள் நடத்தி போராட்டத்திற்குப் பிறகு சிறைகளில் இருந்து 540 இந்திய கைதிகள் தப்பியோடி விட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இந்தப் போராட்டத்தின் போது நேபாளத்தில் உள்ள பல்வேறு சிறைகளில் இருந்து சுமார் 13,000 பேர் தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தண்டனை கைதி
இதில், நேபாளத்தைச் சேர்ந்த 5,000 தண்டனை கைதிகளும் மற்றும் இந்தியா (India) உள்ளிட்ட பிற நாடுகளைச் சேர்ந்த 108 கைதிகளும் தப்பியோடியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, சிறையில் இருந்து கைதிகள் தப்பியது தொடர்பாக நாடு முழுவதும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், தப்பியோடிய கைதிகள் அந்தந்த சிறைகளுக்கு திரும்புமாறு அந்நாட்டு உள்துறை அமைச்சகமும் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
