வெளிநாட்டு பிரஜைகளுக்கு வாகனம் வழங்குபவர்களுக்கு வரப்போகும் சிக்கல்
Sri Lanka Police
Sri Lanka Tourism
Driving Licence
By Sumithiran
சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத வெளிநாட்டு பிரஜைகளிடம் வாகனங்களை செலுத்த கொடுக்கும் வாகன உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பிரதி காவல்துறை மாஅதிபர் டபிள்யு. ஜி. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.
காவல்துறைஊடகப் பிரிவில் நேற்று திங்கட்கிழமை (26) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே காவல்துறை போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பிரதி காவல்துறை மா அதிபர் இதனை தெரிவித்துள்ளார்.
அதிகரித்து வரும் விபத்துக்களின் எண்ணிக்கை
நாட்டில் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், வீதி விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பிரதி காவல்துறை மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
9ம் ஆண்டு நினைவஞ்சலி