ரணிலின் யாழ் வருகையால் தமிழ் சமூகத்திற்கு ஏற்பட்ட அதிருப்தி
அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் யாழ் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் போராட்டத்தில் கலந்துகொண்ட சிவகுரு ஆதீனத்தின் முதல்வர் வேலன் சுவாமிகள் மீது மதத்தலைவர் என்ற மரியாதை வழங்கப்படாது அவர் மீது நீர்த்தாரை பிரயோகிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் இன்று தமிழ் சமூகத்தை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மதத் தலைவர்கள் மீதான மரியாதையற்ற நடவடிக்கை
கடந்த காலங்கள் முதலே வடக்கு, கிழக்கு உள்ளிட்ட இடங்களில் மதத் தலைவர்கள் மீதான மரியாதையற்ற நடவடிக்கைகள் தொடர்ந்து வந்துகொண்டு தான் இருக்கின்றன.
குறிப்பாக போராட்டங்களின் போது மதத்தலைவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளுதல், மதத்தலைவர்கள் பலர் காணாமல் ஆக்கப்பட்டமை உள்ளிட்ட பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இந்த நிலையில் தேசிய தைப்பொங்கல் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அதிபர் வருகை தந்திருந்த நிலையில், நடத்தப்பட்ட இந்த சம்பவமானது விசனத்திற்கு உள்ளாகியுள்ளது.
படங்கள்





நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம் நாள் - கொடியிறக்கம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
