அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி தமிழர் பகுதியில் போராட்டம்
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி மன்னாரில் கையெழுத்து போராட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.
குறித்த போராட்டமானது மன்னார் பேருந்து தரிப்பிடத்தின் முன்பாக இன்று (30) இடம்பெற்றுள்ளது.
அத்துடன், இந்த போராட்டமானது போராளிகள் நலன்புரி சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அரசியல் கைதிகள்
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளையும் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட பின்னர் நீதி மன்றத்தினால் விடுதலை செய்யப்பட்ட பின்பும் மீண்டும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளையும் புதிய அரசாங்கம் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி கையெழுத்துப் போராட்டம் நடைபெற்றுள்ளது.
இதில் அருட்தந்தையர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு கையெழுத்திட்டுள்ளனர்.
கிளிநொச்சி
இதேவேளை, கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் 2871 நாட்களாக தொடரும் நிலையில், இன்றும்(30) போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் இன்று காலை 10.00 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க அலுவலகம் முன்பாக இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி போராட்டம் ஒன்றை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராடமானது யாழ்ப்பாணம், முனியப்பர் ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்டு ஊர்வலமாக யாழ். பிரதான வீதி மற்றும் காங்கேசன்துறை வீதியூடாக சென்று யாழ் மத்திய பேருந்து நிலையத்தை சென்றடைந்துள்ளது.
இதையடுத்து, யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் ஒன்று கூடிய வாழும் உறவுகள் தமது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் நிலைகுறித்து சர்வதேசமே தீர்வை வழங்க வேண்டும் போன்ற சுலோகங்களை வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |