கொழும்பு கலவரத்தை கண்டித்து வடக்கில் போராட்டம்
கிளிநொச்சி அறிவியல் நகர் பல்கலைக்கழக வளாக மாணவர்கள் போராட்டம் தென்னிலங்கை சம்பவத்தை கண்டித்து யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
09.05.2022 இன்று பிற்பகல் 5.15 மணியளவில் கிளிநொச்சி அறிவியல் நகர் பல்கலைக்கழக வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் A9 வீதி வரை முன்னெடுக்கப்பட்டு A9 வீதி போக்குவரத்துக்கு எந்த இடையூறு செலுத்தாமல் பல்கலைக்கழக மாணவர்கள் தங்களின் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆரம்பமான போராட்டம் இன்று பாரிய வன்முறைச் சம்பவமாக வெடித்துள்ளது.
கோட்டா கோ கமவில் நடத்தப்பட்ட போராட்ட இடத்திற்கு வருகை தந்த குண்டர்களால் அங்கு அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் உள்ளிட்டவை அடித்து நொறுக்கப்பட்டு கலவரம் உண்டாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பலர் படுகாயமடைந்துள்ளதுடன் பொதுச் சொத்துக்கள் பல சேதமாக்கப்பட்டுள்ளன.
இதனை கண்டித்து யாழ்.பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
