யாழில் திறக்கப்படவுள்ள புதிய மதுபானசாலைகளுக்கு எதிராக வெடித்த போராட்டம்!
யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிதாக அனுமதியளிக்கப்பட்ட நான்கு மதுபானசாலைகளின் அனுமதிகளை இரத்துச் செய்யுமாறு கோரி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நடைபெற்றது.
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினரால் குறித்த பிரதேச சபைக்கு முன்பாக இன்று (15.10.2026) இந்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வலிகாமம் கிழக்கு பிரதேச சபை எல்லைக்குட்ட நீர்வேலி பகுதியில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்பட்டதுடன் மேலும் மூன்று புதிய மதுபானசாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எதிர்ப்பை வெளிப்படுத்தினர்
இந்தநிலையில் இப்போராட்டத்தின் போது புதிதாக அனுமதியளிக்கப்பட்ட நான்கு மதுபானசாலைகளுக்கு எதிராகப் பதாகைகளைத் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இதன்போது, வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் ச. சுகிர்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், மதுவொழிப்புக்கான அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

