அரச தலைவரது செயலகம் முற்றுகை (படம்)
Colombo
Galle Face Protest
Gotabaya Rajapaksa
SL Protest
By Vanan
கொழும்பு - காலிமுகத்திடலில் உள்ள அரச தலைவர் செயலகம் தற்போது முற்றுகையிடப்பட்டுள்ளது.
இன்று காலை அலரி மாளிகை முன்பாக மகிந்தவிற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு வந்த பொது மக்களை தாக்கியிருந்தனர்.
இதனையடுத்து ஆவேசமடைந்த அரசாங்க எதிர்ப்பாளர்கள் தொடர்ச்சியாக நாட்டின் பல பகுதிகளில் அரசியல்வாதிகளின் இல்லங்களை தீயிட்டு கொளுத்தி வருகின்றனர்.
அத்துடன் சற்றுமுன் அலரிமாளிகைக்குள்ளும் இவர்கள் நுழைய முயற்சித்த நிலையில் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான சூழ்நிலையிலேயே கடும் கோபத்திலிருக்கும் அரசாங்க எதிர்ப்பாளர்கள் அரச தலைவரது செயலகத்தையும் முற்றுகையிட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.



ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்