பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலால் வெடித்த பாரிய போராட்டம் !

France Election World
By Shalini Balachandran Jul 01, 2024 08:53 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in உலகம்
Report

பிரான்ஸ் (France) நாடாளுமன்ற தேர்தலின் முதல் சுற்று முடிவுகளின் படி ஆளும் கட்சிக்கு எதிராக வலதுசாரிக் கட்சி பெரும் வெற்றியை பெற்றுள்ள நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரியினர் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் (Paris) வன்முறையில் இறங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரான்சில் அதிபர் இமானுவல் மேக்ரான் (Emmanuel Macron ) நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தல் அறிவித்ததுமே அதிபரின் இந்த முடிவு அவருக்கே எதிராக திரும்பலாம் என அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருந்தார்கள்.

இதனடிப்படையில் அதை போலவே தேர்தலில் முதல் சுற்று முடிவுகள் ஆளும் கட்சிக்கு எதிராக அமைந்து எதிர்பார்த்தது போல வலதுசாரிக் கட்சி பெரும் வெற்றியை பெற்றுள்ளது.

கனடாவில் வானில் தோன்றிய விசித்திரமான ஒளி : வைரலாகும் காணொளி

கனடாவில் வானில் தோன்றிய விசித்திரமான ஒளி : வைரலாகும் காணொளி

வெற்றிக்கு எதிர்ப்பு 

அத்தோடு, மேக்ரான் கட்சிக்கு மூன்றாம் இடம்தான் கிடைத்துள்ள நிலையில் வலதுசாரியினரின் வெற்றிக்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரியினர் பாரீஸில் வன்முறையில் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலால் வெடித்த பாரிய போராட்டம் ! | Protests In Paris France Election

இதன்போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் கடைகளின் கண்ணாடிகளை அடித்து நொறுக்குவதும் மற்றும் தீவைப்பு சம்பவங்களுமாக பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் வன்முறை வெடிக்க பேரணியில் ஈடுபட்டவர்களைக் கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2024 இற்கான பிரபலமான விளையாட்டு நட்சத்திரம் : இலங்கை வீரருக்கு கிடைத்த விருது

2024 இற்கான பிரபலமான விளையாட்டு நட்சத்திரம் : இலங்கை வீரருக்கு கிடைத்த விருது

வலதுசாரியினர் ஆட்சி

இந்நிலையில், வலதுசாரியினர் ஆட்சியைக் கைப்பற்றுவதைத் தடுக்க என்ன செய்வது என்ற யோசனையில் பிற கட்சிகள் இறங்கியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலால் வெடித்த பாரிய போராட்டம் ! | Protests In Paris France Election

பிரான்சில் முதல் கட்டத் தேர்தலில் அதிக வாக்குகளைப் பெறும் இரண்டு கட்சிகளுக்கிடையில்தான் இரண்டாவது கட்ட போட்டி நடைபெறும் இதனால் மேக்ரான் கட்சி போட்டியிட வாய்ப்பில்லையென தெரிவிக்கபடுகின்றது.

மேலும், சில கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை பதவி விலகச் செய்து அதன் மூலம் வலதுசாரியினரை வெற்றி பெறச் செய்யவிடாமல் தடுக்க திட்டங்கள் தீட்டிவருவதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மீண்டும் சீண்டுகிறது வடகொரியா: கடும் எச்சரிக்கை விடுத்த தென்கொரியா

மீண்டும் சீண்டுகிறது வடகொரியா: கடும் எச்சரிக்கை விடுத்த தென்கொரியா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021