மீண்டும் சீண்டுகிறது வடகொரியா: கடும் எச்சரிக்கை விடுத்த தென்கொரியா
வட கொரியா (North Korea) இன்று (1) இரண்டு பொலிஸ்டிக் ஏவுகணைகளை (ballistic missiles) ஏவியுள்ளது.
குறித்த ஏவுகணைகளில் ஒரு ஏவுகணை வெடித்து சிதறியிருக்கலாம் என்று தென்கொரியா (South Korea) தெரிவித்துள்ளது.
முன்னதாக ஐந்து நாட்களுக்கு முன்னரும் வடகொரியாவின் ஏவுகணை வீச்சு தோல்வியடைந்த நிலையிலேயே இன்றும் (01) தோல்வி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏவுதல் குறித்து ஆய்வு
அத்துடன், இதுவரை இந்த ஏவுதல் குறித்து ஆய்வு செய்து வருவதாகவும், சம்பவத்தின்போது வடகொரியாவில் ஏதேனும் உயிரிழப்பு அல்லது சேதம் ஏற்பட்டதா என்பதை உடனடியாக உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் தென்கொரியா கூறியுள்ளது.
இதற்கு முதல், மேற்குக் கடற்கரைக்கு அருகிலுள்ள ஒரு பகுதியில் இருந்து 600 கிலோ மீற்றர் வரை முதலாவது ஏவுகணை பறந்ததாகவும், இரண்டாவது ஏவுகணை சுமார் 120 கிலோ மீற்றர் தூரமே பறந்ததாகவும் தென்கொரியாவின் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
தென்கொரியா சந்தேகம்
அதாவது, இரண்டாவது ஏவுகணை, வடகொரியாவின் வடக்கு தலைநகரான பியோங்யாங்கிற்கு அருகில் உள்ள பகுதியில் வீழ்ந்திருக்கலாம் என்று தென்கொரியா சந்தேகம் வெளியிட்டுள்ளது.
இந்தநிலையில், வடகொரியாவின் ஏவுகணை திட்டம், கொரிய தீபகற்பத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை கடுமையாக அச்சுறுத்தும் ஒரு ஆத்திரமூட்டல் செயலாகும் என்று தென்கொரியா குறிப்பிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |