இவ்வருட குற்றச்செயல்களில் முதலிடம் பிடித்த மாகாணம் மற்றும் காவல்துறைப் பிரிவுகள்; வெளியிடப்பட்டுள்ள ஆய்வு அறிக்கை!

Sri Lanka Police Sri Lankan Peoples Crime Branch Criminal Investigation Department Crime
By Pakirathan Dec 28, 2022 07:14 AM GMT
Report

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக இவ்வருடம் குற்றச்செயல்களும் அதிகளவில் அதிகரித்துள்ளன.

அந்தவகையில், கடந்த வருடங்களை விட இவ்வருடம் நாட்டில் அதிகளவான குற்றச் செயல்கள் இடம்பெற்றுள்ளன.

இலங்கையில் இவ்வருடம் மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயல்களின் மாகாண மற்றும் காவல்துறைப் பிரிவு வாரியான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மாகாண ரீதியில் குற்றச்செயல்கள்

இவ்வருட குற்றச்செயல்களில் முதலிடம் பிடித்த மாகாணம் மற்றும் காவல்துறைப் பிரிவுகள்; வெளியிடப்பட்டுள்ள ஆய்வு அறிக்கை! | Provinces Police Units Highest Crime In Sri Lanka

இலங்கையில் இடம்பெற்ற குற்றச்செயல்கள் தொடர்பான ஆய்வினை பேராதனைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

அந்தவகையில், குறித்த குற்றச் செயல்களில் மேல்மாகாணம் முதலிடத்தில் உள்ளதுடன், 37 வீதமான குற்றங்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளன.

இதேவேளை, வடமேற்கு மாகாணத்தில் 13 வீதமும், தென் மாகாணத்தில் 10 வீதமும், சப்ரகமுவ மாகாணத்தில் 09 வீதமும் மற்றும் மத்திய மாகாணத்தில் 08 வீத குற்றங்களும் பதிவாகி உள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியர் வசந்த அத்துகோரள சுட்டிக்காட்டியுள்ளார்.

குற்றச்செயல்களின் வகைகளின் அடிப்படையில்

இவ்வருட குற்றச்செயல்களில் முதலிடம் பிடித்த மாகாணம் மற்றும் காவல்துறைப் பிரிவுகள்; வெளியிடப்பட்டுள்ள ஆய்வு அறிக்கை! | Provinces Police Units Highest Crime In Sri Lanka

இந்தக் குற்றச்செயல்களில் சொத்துக்கள் தொடர்பில் 16,317 குற்றங்களும், நபர்களுக்கு எதிராக 5,964 குற்றங்களும் பதிவாகியுள்ளதுடன், இவ்வருடம் 1,466 வாகனத் திருட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளமையும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த வாகனத் திருட்டில் 39 வீதமானவை மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மேற்கொள்ளப்பட்ட கொள்ளைச் சம்பவங்களில் 14 சதவீதம் வடமேற்கு மாகாணத்திலும், 13 சதவீதம் தென் மாகாணத்திலும் இடம்பெற்றுள்ளது.

காவல்துறைப் பிரிவு ரீதியில் குற்றச்செயல்கள்

இவ்வருட குற்றச்செயல்களில் முதலிடம் பிடித்த மாகாணம் மற்றும் காவல்துறைப் பிரிவுகள்; வெளியிடப்பட்டுள்ள ஆய்வு அறிக்கை! | Provinces Police Units Highest Crime In Sri Lanka

இவ்வருடம் காவல்துறைப் பிரிவுகளில் இடம்பெற்ற பாரிய குற்றச்செயல்களில் களனி காவல்துறைப்பிரிவிலே அதிகளவான குற்றங்கள் இடம்பெற்றுள்ளன.

அந்தவகையில், களனி காவல்துறைப்பிரிவில் 2,287 குற்றங்கள் பதிவாகியுள்ளது.

மேலும், அனுராதபுரத்தில் 2,058 குற்றங்களும், நுகேகொட காவல்துறைப் பிரிவில் 2,018 குற்றங்களும் பதிவாகியுள்ளதாக பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.

வழக்குகளின் அடிப்படையில்  

இவ்வருட குற்றச்செயல்களில் முதலிடம் பிடித்த மாகாணம் மற்றும் காவல்துறைப் பிரிவுகள்; வெளியிடப்பட்டுள்ள ஆய்வு அறிக்கை! | Provinces Police Units Highest Crime In Sri Lanka

இவ்வருடம் இடம்பெற்ற வழக்குகளில் 3,596 கடத்தல் வழக்குகள், 6,208 வீடுகள் உடைப்பு மற்றும் 2,159 கொள்ளை வழக்குகள் பதிவாகியுள்ளன.

கடந்த 2021 மற்றும் 2020 ம் ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இவ்வருடமே அதிகளவான குற்றச்செயல்கள் இடம்பெற்றுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழக ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015