எங்கள் பாதுகாப்பையும் கல்வியையும் உறுதி செய்! புங்குடுதீவு மாணவர்கள் போராட்டம்
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு, புங்குடுதீவு பாடசாலை மாணவர்களின் ஏற்பாட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திய கவனயீர்ப்பு பேரணி வெள்ளிக்கிழமை (2) இடம்பெற்றது.
புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் இருந்து ஆரம்பமான பேரணி, பெருங்காட்டு சிவன் ஆலயம் வரை நடைபவனியாகச் சென்று நிறைவடைந்தது.
பேரணியில் பங்கேற்ற மாணவர்கள், சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல், கல்விக்கு முன்னுரிமை வழங்குதல் மற்றும் தீவகப் பகுதிகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை உடனடியாக நிவர்த்தி செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.
ஆரோக்கியமான சமூக சூழல்
மேலும், புங்குடுதீவு தீவின் மத்தியில் அமைந்துள்ள மதுபானசாலையை அகற்ற வேண்டும் என்றும், சிறுவர்களுக்கு பாதுகாப்பானதும் ஆரோக்கியமானதுமான சமூகச் சூழலை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

சிறுவர்களின் உரிமைகள் மற்றும் கல்வி உரிமையை உறுதிப்படுத்துவதற்கு உரிய தரப்பினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியே இந்தக் கவனயீர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |










