கொழும்பில் தடம் புரண்ட தொடருந்து: திருத்தும் பணிகள் தீவிரம் (படங்கள்)
கொழும்பு - கொள்ளுப்பிட்டியில் தொடருந்து ஒன்று தடம் புரண்டதன் காரணமாக கரையோர தொடருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் கொள்ளுப்பிட்டி பகுதியில் இன்று (27) காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மஹவயிலிருந்து மொரட்டுவை நோக்கி பயணித்த தொடருந்தே கொள்ளுப்பிட்டி பகுதியில் தடம் புரண்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
தடம் புரண்டதற்கான காரணம்
தொடருந்து தடம் புரண்டதன் காரணமாக கரையோரப் பாதையில் ஒரு பாதையில் மாத்திரம் தொடருந்து இயங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பிலிருந்து செல்லும் பயணிகளுக்கு அசௌகரியங்கள் ஏற்படக்கூடும் என்பதால் மாற்றுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறு திணைக்களம் தெரிவித்துள்ளது.

தொடருந்து தடம் புரண்டதன் காரணமாக தொடருந்து பாதையும் சேதமடைந்துள்ளதாகவும், திருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.