மலைப்பகுதி வாழ் மக்களுக்கு வெளியான எச்சரிக்கை : மீண்டும் ஏற்படப்போகும் ஆபத்து
Weather
Floods In Sri Lanka
Cyclone
By Sumithiran
டித்வா சூறாவளியுடன் பெய்த கனமழையால் மலைப்பகுதிகளில் உள்ள நிலத்தடி மண் ஏற்கனவே தண்ணீரால் நிரம்பிவிட்டதால், பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) வலியுறுத்தியுள்ளது.
பல இடங்களில் ஏற்கனவே விரிசல்கள் தோன்றி வருகின்றன, மேலும் அடுத்த சில நாட்களில் கனமழை பெய்தால், மீண்டும் கடுமையான ஆபத்து ஏற்படக்கூடும்.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்
சமீபத்திய வானிலை அறிக்கைகளின் அடிப்படையில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இந்த பொது அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அடுத்த சில நாட்களில் நாட்டில் வடகிழக்கு பருவமழை படிப்படியாக நிலைபெறும் என்றும், டிசம்பர் 4 முதல் வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழை அதிகரிக்கும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் நேற்று (02) பிற்பகல் 3 மணிக்கு வானிலை அறிக்கையை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விழிநீரால் விளக்கேற்றத் தயாராகும் தமிழர் தேசம்
6 நாட்கள் முன்
16, 10ம் ஆண்டு நினைவஞ்சலி