பிரபாகரனின் மரணச் செய்தியை எதிர்பார்த்துக் காத்திருந்தார் ராஜீவ் காந்தி

Rajiv Gandhi LTTE Leader Indian Army Liberation Tigers of Tamil Eelam Indian Peace Keeping Force
By Niraj David Apr 17, 2024 10:36 AM GMT
Niraj David

Niraj David

in சமூகம்
Report

இந்தியப் படையின் ஆக்கிரமிப்புக் காலத்தில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் வன்னியில் காடுகளின் மத்தியில் தளம் அமைத்து போராட்;டத்தை நெறிப்படுத்திக்கொண்டிருந்தார். அது ஒரு இக்கட்டான காலப்பகுதி. வன்னியை வளைத்து இந்தியப் படையினர் நிலைகொண்டிருந்தனர். சிறுசிறு முகாம்கள்.

பாரிய தளங்கள், ரோந்துக்கள், வீதி உலாக்கள். சுற்றிவகைப்புகள், வான் தாக்குதல்கள், பீரங்கித் தாக்குதல்கள் என்று புலிகளின் தலைவரைக் குறிவைத்து நிறைய நகர்வுகள் இந்தியப் படையினரால் மேற்கொள்ளப்பட்டுக்கொண்டிருந்தன.

இத்தனைக்கும் மத்தியில் புலிகளின் தலைவர் தனது புலிப் போராளிகளுடன் இணைந்து வீர யுத்தம் புரிந்துகொண்டிருந்தார். ஏத்தனையோ விதமான நெருக்குதல்களைச் சமாளித்தபடி அவரது போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. புலிகளின் தலைவரையும், மற்றய இடங்களில் இருந்து செயற்பட்டுக்கொண்டிருந்த கொரிலாக்களையும் பிரிக்கும் முகமாக பல நகர்வுகளை இந்தியப் படையினர் எடுத்திருந்தார்கள்.

முக்கிய படை நடவடிக்கைகள் 

அப்படியும் அவர்களால் புலிகளின் போராட்ட வீச்சைத் சிறிதும் தணிக்க முடியாமல் போராட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருந்தது.

ஒரு சந்தர்ப்பத்தில் புலிகளின் தலைவரை ஒழித்துக்கட்டுவதன் மூலம்தான் புலிகளின் போராட்டப் பலத்தைச் சிதைக்கமுடியும் என்ற தீர்மானத்திற்கு வந்த இந்தியப் படையினர், அந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு மூன்று பாரிய படை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்கள்.

பிரபாகரனின் மரணச் செய்தியை எதிர்பார்த்துக் காத்திருந்தார் ராஜீவ் காந்தி | Rajiv Gandhi Waiting News Of Prabhakaran S Death

வன்னி, மணலாற்றுக் (வெலியோயா) காடுகளில் மறைந்திருந்த புலிகளின் தலைவர் பிரபாகரனைப் பூண்டோடு ஒழித்துவிடும் நோக்கத்தில் இந்தியப் படையினர் மூன்று முக்கிய படை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்கள்.

முதலாவது: ஆப்பரேசன் திரீசூல் (”Operation ‘Thrishul’ ). இரண்டாவது: ஓப்பரேசன் வீரத் (Operation ‘Viraat’) மூன்றாவது: ஓப்பரேசன் செக்மேட். (Operation Check-mate) ஓப்பரேசன் திரிசூல் 1988ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மேற்கொள்ளப்பட்டது.

ஓப்பரேசன் வீரத் அதே வருடம் மே மற்றும் ஜூன் மாதங்களில் மேற்கொள்ளப்பட்டது. புலிகளின் தலைவரைக் குறிவைத்து வடபகுதி முழுவதுமாக இடம்பெற்ற நடவடிக்கைகளுக்கு ஓப்பரேசன் செக் மேட் என்று பொதுவான பெயரிடப்பட்டிருந்தது.

செக் மேட் என்கின்ற வார்த்தை சதுரங்க(Chess) விளையாட்டில் உபயோகிக்கப்படுவது வழக்கம். சதுரங்க விளையாட்டின் இறுதியாக ஒருதப்பில் உள்ள ராணிக்கு எதிரி குறிவைத்து, அந்த ராணி நகர முடியாத ஒரு நிலைக்குத் தள்ளப்படும் சந்தர்ப்பத்தை ‘செக்மேட் ‘(Check-mate) என்று கூறுவார்கள்.

விடுதலைப் புலிகளின் தலைவரும் எங்குமே நகர முடியாத ஒரு நிலை ஏற்பட்டுவிட்டதாகவும், இந்தியப் படையினரின் கைகளில் அகப்படுவதைத் தவிர அவருக்கு வேறு எந்த வழியுமே இல்லை என்பதை வெளிப்படுத்தவே இந்த படை நடவடிக்கைக்கு இப்படியான ஒரு பெயரை இந்தியப் படைத்துறைத் தலைமை சூட்டியிருந்தது.

இந்தியப் படையினர்

‘புலிகளின் தலைவர் ஒன்று தம்மிடம் சரனடைய வேண்டும்…, அல்லது சயனைட்டை உட்கொண்டு; தற்கொலை செய்யவேண்டும்…  இரண்டையும் தவிர அவருக்கு வேறு வழியே கிடையாது‘ என்று இந்தியப் படைத் தளபதிகள் இந்திய அரசியல் தலைமைக்கு அறிவித்திருந்தார்கள்.

அந்த அளவிற்கு புலிகளின் தலைமையை நோக்கி முற்றுகைகள் இறுகியுள்ளதாக அவர்கள் நம்பிக்கை வெளியிட்டிருந்தார்கள். புலிகளின் தலைவரைக் குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட அந்த முற்றுகைகளில் இந்தியாவின் விமானப்படை, கடற்படை மற்றும் இந்திய இராணுவம் என்பன முழுப்பலத்துடன் இறக்கப்பட்டிருந்தன.

இந்தியப் படையினர் புலிகளின் தலைமை மீதான தமது சுற்றிளைப்பை ஒன்றன் பின் ஒன்றாக மூன்று அடுக்கு வளையங்களாக அமைத்திருந்தார்கள். ஏதாவது ஒரு வளையத்தினுள் புலிகளின் தலைவர் சிக்கியேயாகவேண்டும் என்பதில் அவர்கள் குறியாக இருந்தார்கள்.

பிரபாகரனின் மரணச் செய்தியை எதிர்பார்த்துக் காத்திருந்தார் ராஜீவ் காந்தி | Rajiv Gandhi Waiting News Of Prabhakaran S Death

அந்தச் சுற்றிவளைப்பின் போது விடுதலைப் புலிகளின் நிலையும் சற்று சிக்கல் நிறைந்ததாகவே இருந்தது. வன்னியின் அடர்ந்த காடுகளின் நடுவே நித்திகைக்குளம் என்கின்ற காட்டுப் பிரதேசத்தில் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களும் சில நூறு போராளிகளும், சுமார் இருபதினாயிரம் இந்தியப் படையினரின் சுற்றிவளைப்பின் நடுவே அகப்பட்டிருந்தார்கள்.

முப்படைகளின் தளபதிகளுக்கும், இச்செய்தி கிடைக்கின்றது. “முற்றுகையை மேலும் இறுக்குங்கள், எவ்வழியாகிலும் பிரபாகரன் தப்பிடாது பார்த்துக்கொள்ளுங்கள் தேவையானால் அவரைக் கொல்லவும் தயங்கவேண்டாம்….’ என்று முப்படைகளின் தளபதிகளிடம் இருந்து களத்திற்கு உத்தரவுகள் பறந்தவண்ணம் இருந்தன.

களத்தில் வகுப்பட்ட திட்டங்களை இந்தியாவில் இருந்த படைத்துறைத் தளபதிகள் மேலும் கூர்மையாக்க ஆரம்பித்தார்கள். மன்னார், வவுனியா, கிளிநொச்சிப் படைத்தளங்களில் இருந்து மேலும் பத்தாயிரம் படையினர் நிதிகைக்குள முற்றுகைக்கு வலுச்சேர்க்கும்படிக்கு அனுப்பபட்டார்கள்.

இருபதுக்கு மேற்பட்ட வான் ஊர்த்திகள், பதினைந்திற்கு மேற்பட்ட குண்டு வீச்சு விமானங்கள், சுமார் ஐந்து வேவு விமானங்கள், முல்லைத்தீவு-திருகோணமலை கடல் எல்லையைக் காவல் செய்தவாறு சுமார் எட்டுப் போர்க்கப்பல்கள், இருபதுக்கு மேற்பட்ட அதிநவீன தாக்குதல் விசைப் படகுகள் -தாக்குதலுக்கு தயார் நிலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.

இவற்றைவிட 1000 மராத்திய அதிரடிப் படையினரும், 1000 குர்க்கா அதிவிசேட அதிரடிப் படையினரும் அச்சுற்றிளைப்புப் பிரதேசத்திற்குள் விரைந்து அனுப்பிவைக்கப்பட்டார்கள்.

ராஜீவ் காந்தி

இந்தச் செய்தி இந்திய அமைதிப்படையின் தளபதி ஊடாக இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கு வான் அலை மூலம் அனுப்பிவைக்கப்பட்டது. ராஜீவுக்கோ சொல்லமுடியாத சந்தோசம்.

ஈழத்தமிழர் விடயத்தில் தமக்குப் பிடித்த தலையிடி இன்னும் ஓரிரு நாட்களுக்குள் தீர்ந்துவிடும் என்ற நிம்மதிப் பெருமூச்சு அவரிடம் இருந்து வெளிப்பட்டது.

பிரபாகரனின் மரணச் செய்தியை எதிர்பார்த்துக் காத்திருந்தார் ராஜீவ் காந்தி | Rajiv Gandhi Waiting News Of Prabhakaran S Death

‘அங்கு என்ன நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது? கள நகர்வுகள் என்ன? முடிவுகள் என்ன? – என்று தனக்கு ஒவ்வொரு அரை மணி நேரமும் அறிவிக்கும்படி ராஜீவ் காந்தி படைத்தளபதிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.

தனது மற்றைய வேலைகள் அனைத்தையும் இரத்துச் செய்யும்படி தனது உதவியாளாகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் இந்தியப் படையினரால் கைப்பற்றப்பட்டுவிட்டார் அல்லது கொல்லப்பட்டுவிட்டார் என்ற செய்தியை உலகிற்கு அறிவிக்கும் அந்த தருணத்தை ஆவலுடன் எதிர்பார்த்து இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி காத்துக்கொண்டிருந்தார்.

தொடரும்…

ReeCha
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, Markham, Canada

10 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

09 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

04 Dec, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொக்குவில், திருகோணமலை, கொழும்பு, Croydon, United Kingdom

08 Dec, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Lingenfeld, Germany

08 Dec, 2025
நன்றி நவிலல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம், Den Helder, Netherlands

09 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Mississauga, Canada

14 Dec, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Montreal, Canada, Laval, Canada

14 Dec, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Tillsonburg, Canada

14 Dec, 2024
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், கொழும்பு, யாழ்ப்பாணம், மிருசுவில், கனடா, Canada

14 Dec, 2020
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Trappes, France

07 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம்

15 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், தையிட்டி, வண்ணார்பண்ணை

14 Dec, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், மலேசியா, Malaysia, கொட்டடி, Scarborough, Canada

12 Dec, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Brampton, Canada

10 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம், கனடா, Canada

17 Nov, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், உரும்பிராய்

06 Dec, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, சென்னை, India

14 Dec, 2019
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Montreal, Canada, Toronto, Canada

14 Dec, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கத்தானை, மீசாலை கிழக்கு, Ottawa, Canada

13 Dec, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சாவகச்சேரி, வவுனியா, சென்னை, India

29 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொல்லன்கலட்டி, Stryn, Norway, Tromso, Norway

10 Dec, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கட்டுடை, Cornwall, United Kingdom

08 Dec, 2020