மக்கள் மத்தியில் இனவாதத்தை தூண்டி விட்டு, மீண்டும் அரசியலில் உள்நுழைய கோட்டாபய திட்டம்

Gotabaya Rajapaksa Sri Lanka SL Protest
By Shalini Balachandran Mar 10, 2024 08:15 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in அரசியல்
Report

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மக்களில் பெரும்பான்மையானோர் 'அரகலய' போராட்டத்தில் பங்கேற்கவில்லை எனவும் மாறாக சிங்களவர்களே அப்போராட்டத்தின் முக்கிய பங்காளிகளாக செயற்பட்டனர் எனவும் மக்கள் பேரவையின் செயற்பாட்டாளரான ராஜ்குமார் ரஜீவ்காந்த் தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் எழுச்சியடைந்த மக்கள் போராட்டத்தின் விளைவாக நாட்டை விட்டு வெளியேறி பதவி விலகவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவினால் எழுதப்பட்ட 'அதிபர் பதவியிலிருந்து என்னை வெளியேற்றுவதற்கான சதி' எனும் நூல் கடந்த வார இறுதியில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் குறித்த புத்தகத்தில் 'அரகலய' போராட்டத்தின் பின்னணி, போராட்டக்காரர்களின் எழுச்சியை அடுத்து தான் நாட்டை விட்டு வெளியேறிய விதம் மற்றும் அவ்விவகாரத்தில் நிலவிய வெளிநாட்டுத் தலையீடுகள் போன்ற பல்வேறு விடயங்களையும் கோட்டாபய ராஜபக்ச அவரது பார்வையின் அடிப்படையில் உள்ளடக்கியுள்ளார்.

அச்சமின்றி பதவியை ஏற்ற ஒரே தலைவர் ரணில் மட்டுமே: கோட்டாபய புகழாரம்

அச்சமின்றி பதவியை ஏற்ற ஒரே தலைவர் ரணில் மட்டுமே: கோட்டாபய புகழாரம்

சிறுபான்மையினர்

இதனடிப்படையில் குறித்த புத்தகத்தில் முக்கிய அம்சமாக 'அரகலய போராட்டத்துக்கு வருகை தந்தவர்கள் யார் என நன்கு ஆராய்ந்தால் அவர்கள் அனைவரும் ஏற்கனவே என்னை எதிர்த்தவர்கள் என்பதைப் புரிந்துகொள்ளவதுடன் அப்போராட்டத்தில் சிறுபான்மையினரின் வகிபாகம் பெருமளவுக்கு இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் மத்தியில் இனவாதத்தை தூண்டி விட்டு, மீண்டும் அரசியலில் உள்நுழைய கோட்டாபய திட்டம் | Rajiv Talks About Gotabaya Aragala Protest Issues

மேலும் தெரிவித்த கோட்டாபய போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர் தமிழர்கள் மற்றும் பொதுபலசேனாவின் எழுச்சிக்குப் பின்னர் முஸ்லிம்கள் என்னை விரோதியாகவே பார்த்தார்களென்றும் எனவே நான் பதவியில் தொடர்ந்தால் சிங்களவர்கள் மற்றும் பௌத்தர்கள் மேலும் பலப்படுத்தப்படுவார்கள் என்ற அச்சத்தின் காரணமாக இப்போராட்டங்களில் ஈடுபடுவதற்கு அவர்கள் தூண்டப்பட்டிருக்கக்கூடுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் இது குறித்து 'அரகலய' போராட்டத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தொடர்ந்து பங்கேற்றுவந்த சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் அவரது கருத்தை தெரிவித்திருந்தார்.

பொய்களை பரப்பும் கோட்டாபய: கடுமையாக சாடும் மனோகணேசன்

பொய்களை பரப்பும் கோட்டாபய: கடுமையாக சாடும் மனோகணேசன்

ஆட்சி பீடம் 

மேலும் தெரிவித்த ராஜ்குமார், ராஜபக்ச குடும்பம் மீண்டும் ஆட்சி பீடம் ஏறுவதற்கும் தமது இயலாமைகளை நியாயப்படுத்திக்கொள்வதற்கும் மேற்கொள்ளும் ஒரு முயற்சியாகவே தாம் இதனைப் பார்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் மத்தியில் இனவாதத்தை தூண்டி விட்டு, மீண்டும் அரசியலில் உள்நுழைய கோட்டாபய திட்டம் | Rajiv Talks About Gotabaya Aragala Protest Issues

அதேபோன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மக்களில் பெரும்பான்மையானோர் 'அரகலய' போராட்டத்தில் பங்கேற்கவில்லையெனவும் மாறாக சிங்களவர்களே அப்போராட்டத்தின் முக்கிய பங்காளிகளாக செயற்பட்டனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, இவ்விடயம் தொடர்பில் தேவையேற்படும் பட்சத்தில் தாம் விரிவான தெளிவுபடுத்தல்களை வழங்கத் தயாராக இருப்பதாகவும் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

கோட்டாபயவின் குற்றச்சாட்டு நகைப்புக்குரியது : சம்பிக்க விளாசல்

கோட்டாபயவின் குற்றச்சாட்டு நகைப்புக்குரியது : சம்பிக்க விளாசல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023