ரணில் - ராஜபக்ச கூட்டணி அனைவரும் கள்வர்கள்: சஜித் - நாமல் கூட்டணிக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்ரமசங்க , மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன மற்றும், எதிர் தரப்புக்களான நாமல் ராஜபக்ச மற்றம் சஜித் பிரேமதாச உள்ளிட்ட அனைவரும் கள்வர்களே. இவர்கள் இணைந்தால் கள்வர்களைக் கைது செய்வது இன்னும் இலகுவாகும் .
இவ்வாறு தொழில் பயிற்சிகள் பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வரலாாற்றில் இல்லாத சட்டவாட்சி
கடந்த காலங்களில் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய நிறுவனங்கள் ஆட்சியாளர்களின் இரும்புப் பாதணிகளுக்கு இரையாகியிருந்தன. இதன் காரணமாக தப்பித்துக் கொண்டனர். ஆனால், தற்போது எமது ஆட்சியில் அவ்வாறான நிலைமை இல்லை. வரலாற்றில் எந்த ஆட்சியிலும் இவ்வாறு பாகுபாடின்றி சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இவர்கள் ஒன்றிணையும் போது பெரிய பூட்டு ஒன்றைப் பூட்டினால் அனைவரையும் ஒரே சந்தர்ப்பத்தில் கைது செய்ய முடியும். தாம் குற்றவாளிகள் என்பதைத் தெரிந்து கொண்டுதான் அவர்கள் ஒன்றிணைந்து தப்பிக்க முயற்சிக்கின்றனர்."என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
