வற் வரி விரைவில் குறைக்கப்படும்! மக்களுக்கு நிவாரணம் கட்டாயம்: ரணில் திட்டவட்டம்
பொருளாதாரம் ஆரம்ப கட்ட ஸ்திரப்படுத்தலில் காணப்படுகிறன்றமையால் நாட்டு மக்களுக்கு தொடர்ந்து நிவாரணம் வழங்கப்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
குறித்த தகவலை அவர் இன்று நடைபெற்ற நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய போதே தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் VAT வரியை மேலும் குறைக்க எதிர்பார்ப்பதாகவும் இதன்படி புத்தகங்கள், பாடசாலை உபகரணங்கள், சுகாதார உபகரணங்கள் மற்றும் மருந்துப் பொருட்களுக்கும் வற்(VAT) வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிவாரணம்
அத்துடன் பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் நிவாரணம் வழங்கப் போவதில்லையெனவும் வெளிநாட்டு அரச முறை கடன்கள் வெகுவிரைவில் மறுசீரமைக்கப்படும் என்றும் 2023 முதல் 2027 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்கு கடன் செலுத்தலுக்காக காலவகாசம் பெற்றுக் கொள்ளப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த வருடத்தில் இரண்டு சதவீதம் முதல் மூன்று சதவீதமான பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியும் என சர்வதேச நிதி நிறுவனங்கள் கணித்துள்ளதாகவும் அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, ஒரு தரப்பினர் அதிகாரத்துக்காக பொய்யுரைப்பதுடன் நான் அதிகாரத்துக்காக செயல்படவில்லையெனவும் நாட்டுக்காகவே செயற்படுகின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வற் வரி
மேலும், அழகிய வார்த்தைகள் மற்றும் வாக்குறுதிகளால் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண முடியாதெனவும் கடுமையான தீர்மானங்கள் ஊடாகவே நெருக்கடியில் இருந்து மீள முடியுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு நாடு பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைந்துள்ளதை அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ள போதிலும் சிலர் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் விமர்சித்து வருவதாக ரணில் தெரிவித்துள்ளார்.
மேலும் பொருளாதாரம் வலுவாக இருப்பதாகத் தோன்றினாலும், அதனை மக்களிடம் காட்டவில்லையெனவும் மக்கள் மீது தேவையில்லாமல் வரி விதிப்பதாகவும் மற்றும் மின்சாரக் கட்டணம், எரிபொருள் கட்டணங்கள் தேவைக்கு அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிகாட்டியுள்ளார்.
அத்தோடு மந்தமாக இருந்த பொருளாதாரம் தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளதாகத் தெரிவித்த ரணில், அது சிரமமானதாக இருந்தாலும் கூட நாளுக்கு நாள் பொருளாதாரம் வலுவடைவதாக தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |