இந்தோனேசியாவிற்கு பறக்கப்போகும் ரணில்: வெளியாகவிருக்கும் விசேட அறிக்கை
இந்தோனேசியாவில் (Indonesia) நடைபெறவுள்ள 10ஆவது உலக நீர் உச்சி மாநாட்டின் உயர்மட்டக் கூட்டத்தில் அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) பங்கேற்கவுள்ளதாக அதிபர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோவின் (Joko Widodo) அழைப்பின் பேரில் அதிபர் ரணில் விக்ரமசிங்க இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளார்.
அதன்படி, அதிபர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் மே மாதம் 18 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளார்.
விசேட அறிக்கை
அத்தோடு, மே 20ஆம் திகதி நடைபெறவுள்ள மாநாட்டின் உயர்மட்டக் கூட்டத்திற்காக அதிபர் ரணில் விசேட அறிக்கையொன்றை வெளியிடுவார் என அதிபர் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இந்நிலையில், 10வது உலக நீர் உச்சி மாநாட்டின் உயர்மட்ட கூட்டம் இந்தோனேசியாவின் பாலி நகரில் மே 18 ஆம் திகதி முதல் 25 திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |