பூமியின் இருப்பை உறுதி செய்வதற்காக முழு உலகமும் ஒன்றுபட வேண்டும் : ரணில் விக்ரமசிங்க

Ranil Wickremesinghe Sri Lanka Dubai Climate Change
By Sathangani Dec 02, 2023 05:45 AM GMT
Report

காலநிலை அனர்த்தங்களை மட்டுப்படுத்தி பூமியின் இருப்பை உறுதி செய்யவதற்காக முழு உலகமும் ஒன்றுபட வேண்டும். அதற்காக தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்ளவதற்கான தயார் நிலைமையை இவ்வருடத்திற்கான கோப்28 ( COP28 ) மாநாட்டில் தீர்மானிக்க வேண்டுமென அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகளின் 28 ஆவது காலநிலை மாற்றங்கள் தொடர்பிலான COP28 உயர்மட்ட மாநாடு 54 அரச தலைவர்களின் பங்கேற்புடன் இன்று (01) டுபாய் எக்ஸ்போ சிட்டியில் ஆரம்பமானது.

இந்த மாநாட்டிலேயே ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்

24 மணிநேரமும் செயற்படவுள்ள தபால் நிலையங்கள்

24 மணிநேரமும் செயற்படவுள்ள தபால் நிலையங்கள்

அனர்த்தங்களுக்கு ஈடுகொடுப்பதற்கு

"COP28  மாநாட்டிற்கு ஒத்துழைப்பு வழங்கியமைக்காக ஐக்கிய அரபு அமீரகத்தின் மன்னருக்கும், அரசாங்கத்திற்கும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறேன்.

பூமியின் இருப்பை உறுதி செய்வதற்காக முழு உலகமும் ஒன்றுபட வேண்டும் : ரணில் விக்ரமசிங்க | Ranil Wickramasinghe Seech In Cop 28 In Dubai

2023 ஆம் ஆண்டு ஐ.நா சுற்றாடல் வேலைத்திட்ட அறிக்கையில் குறித்த விடயம் "உடைக்கப்பட்ட வாக்குறுதிகள்" என்று எச்சரிக்கப்பட்டிருப்பதோடு, நூற்றாண்டின் இறுதியில் உலகின் வெப்பநிலை 3 செல்சியஸினால் அதிகரிக்கும்.

நிதி, தொழில்நுட்பம் மற்றும் காலநிலைக்கான முதலீடுகள் தொடர்பிலான குறைந்தளவான செயற்பாடுகளின் விளைவாக, அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் பெரும் விளைவுகளுக்கு முகம்கொடுக்க நேரிடும்.

காலநிலை நிதியளித்தல் தொடர்பான உயர்மட்ட நிபுணத்துவ குழுவின் அறிக்கையில் காலநிலை அனர்த்தங்களுக்கு ஈடுகொடுப்பதற்கு வருடத்திற்கு குறைந்தபட்சம் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டொலர்களாவது அவசியப்படும்.

நிதியளிப்பதற்கான நியதிகளை செயற்படுத்துவதற்கான குழுவின் 2023 நவம்பர் 4 ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கையில் சுயாதீன பங்களிப்புக்களை மாத்திரம் பெற்றுத்தருமாறு கோரப்பட்டுள்ளது.

12 வயது மகள் வன்புணர்வு : சிறிலங்கா இராணுவ ஊழியர் கைது

12 வயது மகள் வன்புணர்வு : சிறிலங்கா இராணுவ ஊழியர் கைது


ஐக்கிய நாடுகள் சுற்றாடல் மாநாட்டில்

அந்த அறிக்கையில் இந்த நிதியம் அல்லது நிதியத்திற்கு பங்களிப்புச் செய்யும் தரப்பு தொடர்பிலான விடயங்கள் குறிப்பிடப்படவில்லை. அந்த அறிக்கையும் உலக கடன் சலுகை வழங்கல் தொடர்பிலான பிரச்சினையின் போது பதிலற்றதாக விளங்குகிறது.

பூமியின் இருப்பை உறுதி செய்வதற்காக முழு உலகமும் ஒன்றுபட வேண்டும் : ரணில் விக்ரமசிங்க | Ranil Wickramasinghe Seech In Cop 28 In Dubai

எவ்வாறாயினும், அந்த அறிக்கை வெளியிடப்பட்டதிலிருந்து நான்கு நாட்களுக்குப் பிறகு வெளியிடப்பட்ட உலகளாவிய மதிப்பீடு தொடர்பிலான முதலாவது தொழில்நுட்ப கலந்துரையாடலுக்கான அறிக்கையில் இதற்காக வருடத்திற்கு குறைந்தபட்சம் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டொலர்கள் அவசியப்படும்.

முரண்பாடுகள் ஏற்படாமல் இருப்பதற்கான இணக்கப்பாடுகளை எட்டுவது இதற்கான தீர்வாக அமையாது. நாம் யாரை ஏமாற்றப் போகிறோம்? காலநிலை நீதிகளை மறுக்கிறோம்.

ஐந்தாவது ஆசிய பசுபிக் வலய சுற்றாடல் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களின் மாநாட்டின் இணக்கப்பாட்டுக்கு அமைவாக, 2024 பெப்ரவரி 06 ஆம் திகதி நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகள் சுற்றாடல் மாநாட்டில் காலநிலை நீதிமன்றம் ஒன்றை நிறுவுவதற்கான யோசனையை இலங்கை முன்வைக்க இருக்கிறது.

அந்த நீதிமன்றம் ஊடாக காலநிலை அனர்த்தங்களை மட்டுப்படுத்துவதற்கான ஆக்கபூர்வமானதும் செயற்திறன் மிக்கதுமான தலையீடுகளை மேற்கொள்வதற்கான களத்தை உருவாக்க வேண்டும்.

மட்டக்களப்பு சிறைச்சாலையில் உயிரிழந்த கைதி : மரணத்திற்கான காரணம் வெளியானது

மட்டக்களப்பு சிறைச்சாலையில் உயிரிழந்த கைதி : மரணத்திற்கான காரணம் வெளியானது


காலநிலை மாற்றம்

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் கூறியது போல், வரி செலுத்துவோரின் பணம் வீணாகாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான சிக்கலைத் தீர்க்க, "உலகளாவிய தீப்பிடிக்கும் காலம் வந்துவிட்டது." எதிரி நம் வாசலில் இருக்கிறான். நாங்கள் இன்னும் தள்ளிப்போடுகிறோம். எதிர்த்துப் போரிட படைகளை தயார்படுத்திக்கொண்டிருக்கிறோம்.

பூமியின் இருப்பை உறுதி செய்வதற்காக முழு உலகமும் ஒன்றுபட வேண்டும் : ரணில் விக்ரமசிங்க | Ranil Wickramasinghe Seech In Cop 28 In Dubai

எனவே, அடுத்த இரு வாரங்கள் மிக முக்கியமானது. காலநிலை மாற்றத்தைத் தணிக்க தலைமைத்துவத்தை வழங்கும் திறன் நம்மிடம் உள்ளதா இல்லையா என்பதை அதன் மூலம் தீர்மானிக்க முடியும்.

புவி வெப்பமடைதலை 1.5 செல்சியஸினால் குறைப்பதில் இலங்கை உறுதியாக உள்ளது. பூமியின் 44% மேற்பரப்பில் 134 வெப்ப வலய நாடுகள் உள்ளன. 2030 களில் அந்த நாடுகளிலேயே உலகின் 50% மக்கள்தொகை காணப்படும். 22 ஆம் நூற்றாண்டில் வெப்ப வலயம் பூமத்திய ரேகையிலிருந்து விலகிச் செல்லக்கூடும் என்று சில விஞ்ஞானிகள் எதிர்வுகூறியுள்ளனர்.

புதுப்பிக்கத்தக்க வலுசக்தி, சுற்றாடல் மாசடைவதைக் கட்டுப்படுத்தல் மற்றும் இயற்கை தீர்வுகளுக்கு பெருமளவான முதலீடுகள் தேவை. எனவே, இலங்கை மற்றும் ஏனைய தரப்பினர் வெப்ப வலயம் தொடர்பான அறிக்கையிடலுக்கான நிபுணர் குழு ஒன்றை கூட்ட தீர்மானித்துள்ளனர்.

இது வெப்ப வலயத்திலும் மாத்திரமின்றி உலகம் முழுவதிலும் பல துறைசார் திட்டத்தை பகிர்ந்தளிக்க உள்ளது. இந்து சமுத்திரப் பிராந்தியத்தை சுற்றியுள்ள நாடுகள் சங்கத்தின் (IORA) தற்போதைய தலைவர் என்ற வகையில், இலங்கை இந்து சமுத்திரத்திற்கும் மற்றும் காலநிலை மாற்றத்துக்கும் இடையில் நிலவும் ஒன்றோடு ஒன்று சார்ந்திருத்தல் தன்மை தொடர்பில் கவனம் செலுத்துகிறது.

முடி உதிர்வால் கிளம்பிய சர்ச்சை: செய்வதறியாது அல்லாடும் வடகொரிய மக்கள்

முடி உதிர்வால் கிளம்பிய சர்ச்சை: செய்வதறியாது அல்லாடும் வடகொரிய மக்கள்


பசுமைப் பொருளாதாரம்

ஒரு பாதுகாப்பான கடல் மூலம் ஒட்சிசன் உற்பத்தி செய்யப்படுவதோடு, புவி வெப்பமடைதலால் உற்பத்தி செய்யப்படும் காபன் மற்றும் வெப்பம் அதன் ஊடாக உறிஞ்சப்படுகிறது. நிலப்பரப்பு, காடுகளுடன் ஒப்பிடும்போது, சதுப்புநிலங்கள் மற்றும் கடற்புற்கள் மூலம் அதிக காபன் உறிஞ்சப்படுகின்றன.

பூமியின் இருப்பை உறுதி செய்வதற்காக முழு உலகமும் ஒன்றுபட வேண்டும் : ரணில் விக்ரமசிங்க | Ranil Wickramasinghe Seech In Cop 28 In Dubai

இருப்பினும், விரைவான காலநிலை மாற்றம் காரணமாக கடல் சூழல் மாறி வருவதுடன், இதனால் கடல் மட்டம் மற்றும் வெப்பநிலை உயர்கிறது. கடல் அமிலமயமாக்கல், பவளப்பாறைகள் அழிவு, கடல் வாழ் உயிரினங்களின் வாழ்விடங்கள் அழிவு மற்றும் தீவிர வானிலை முறைகள் ஏற்படும்.

இந்த நிகழ்வுகள் மூலம் கடல் பல்லுயிர்த்தன்மை, கடல் சார்ந்த உணவு முறைகள் மற்றும் கடலோர வாழ்வாதாரத்தை சீர்குலைப்பதன் மூலம் நேரடியாக மனித உயிர்களை பாதிக்கிறது.

இந்து சமுத்திரத்தை எதிர்கால சந்ததியினருக்கு பாதுகாப்பதற்காக நிலைபேறான, அனைத்தையும் உள்ளடக்கிய மற்றும் மக்களை மையமாகக் கொண்ட பசுமை பொருளாதாரத்தை உறுதிசெய்வதற்காக இந்து சமுத்திரத்திரப் பிராந்திய நாடுகளின் சங்கத்தின் உறுப்பு நாடுகள் மற்றும் பங்காளிகள், அர்பணிப்புடன் செயற்படுவார்கள்.

வெப்ப வலய மற்றும் இந்து சமுத்திரத்தின் ஒன்றிணைவானது காபன் வரிசைப்படுத்தலின் மிகப்பெரிய உலகளாவிய ஒன்றிணைவாக மாற்றப்படும். எனவே, இது தொடர்பாக பட்டப்பின்படிப்பு வாய்ப்புகளை உருவாக்கும் வகையில், சர்வதேச பல்கலைக்கழகத்தை நிறுவ வேண்டும்.

புவி வெப்பமடைதலை 1.5 செல்சியஸாகக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு பங்களிக்கும் திறனை மேம்படுத்தல் மற்றும் ஆராய்ச்சியை முன்னெடுத்தல் போன்ற நோக்கங்களுக்காகவே காலநிலை மாற்றம் குறித்த சர்வதேச பல்கலைக்கழகம் (ICCU) நிறுவப்படவுள்ளது.” எனத் தெரிவித்தார்.

 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம், கனடா, Canada

17 Nov, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, Toronto, Canada

20 Nov, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், மெல்போன், Australia

27 Nov, 2021
மரண அறிவித்தல்

உடுவில், பிரான்ஸ், France, Ajax, Canada

20 Nov, 2024
மரண அறிவித்தல்

காரைநகர், Harrow, United Kingdom

14 Nov, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

12 Dec, 2014
மரண அறிவித்தல்

காரைநகர் கோவளம், திருகோணமலை, கொழும்பு

22 Nov, 2024
மரண அறிவித்தல்

வேலணை பள்ளம்புலம், காரைநகர், Toronto, Canada

18 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை சிறுவிளான், பிரான்ஸ், France

23 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் தங்கோடை, அளவெட்டி, London, United Kingdom

04 Dec, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, ஜேர்மனி, Germany

23 Nov, 2009
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, வவுனியா

22 Nov, 1999
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, தெல்லிப்பழை

23 Oct, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி, Aachen, Germany, Herzogenrath, Germany

20 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Zürich, Switzerland

20 Nov, 2024
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் கிழக்கு, Jaffna, Ajax, Canada

21 Nov, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Scarborough, Canada

20 Nov, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், புத்தளம், Frederikssund, Denmark, Gormley, Canada

20 Nov, 2024
மரண அறிவித்தல்

வவுனியா, மட்டுவில் தெற்கு, Bobigny, France

15 Nov, 2024
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, வவுனியா, Milton Keynes, United Kingdom

17 Nov, 2024
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, Krefeld, Germany

17 Nov, 2024
மரண அறிவித்தல்

பாண்டிருப்பு, முனைத்தீவு

19 Nov, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம், சுதுமலை, கொழும்பு, West Drayton, United Kingdom

09 Nov, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், கனடா, Canada

21 Nov, 2017
17ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், சுவிஸ், Switzerland

21 Nov, 2007
45ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மயிலிட்டி, பருத்தித்துறை, உரும்பிராய், வல்வெட்டித்துறை

12 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada

21 Nov, 2023
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், உசன்

19 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சரவணை, வவுனியா கூமாங்குளம்

26 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Harrow, United Kingdom

16 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
மரண அறிவித்தல்

அச்சுவேலி, கரவெட்டி, Melbourne, Australia

16 Nov, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், கொழும்பு

11 Dec, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Vaughan, Canada

12 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, நெல்லியடி வடக்கு

02 Dec, 2023
மரண அறிவித்தல்

நல்லூர், திருநெல்வேலி, London, United Kingdom

13 Nov, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, கொழும்பு

18 Nov, 2014
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Wembley, United Kingdom

13 Nov, 2024