அநுர அரசை நேரடியாக எச்சரித்த சீனா
சீனா நேரடியாக அநுர அரசுக்கு மகிந்தவை துன்புறுத்த வேண்டாம் என எச்சரிக்கை விடுத்ததாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டதாக இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமன்றி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) கைது நடவடிக்கையானது அநுர அரசின் பிரச்சார நடவடிக்கை என்றும் அதுவே எதிர்க் கட்சிகளை ஒன்றிணைக்க காரணமானதாகவும் அவர் இங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க பதவியேற்று இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தியாகின்ற நிலையில் அவர்கள் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறி விட்டார்கள் என்றும் அரூஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இவை தொடர்பாக அவர் மேலும் தெரிவித்த விரிவான கருத்துக்களை கீழுள்ள காணொளியில் காணலாம்...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
