தேசபந்து தென்னகோன் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தார் ரஞ்சன் ராமநாயக்க
நீதிமன்றால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தற்போது தலைமறைவாகியுள்ள முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன்(deshabandu tennakoon) எங்கு ஒளிந்துள்ளார் என்பதை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க (ranjan ramanayake) வெளிப்படுத்தியுள்ளார்.
இதன்படி தேசபந்து தென்னகோன், இலங்கையில் உள்ள ஒரு முக்கிய அரசியல்வாதியின் வீட்டில் இருப்பதாக அறிய வந்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
இதுவே முதல் முறை
"இலங்கை வரலாற்றில் ஒரு ஐஜிபி, காவல்துறையினரிடமிருந்து ஒளிந்து கொள்வது இதுவே முதல் முறை. ஷானி அபேசேகர ஒரு மேதை, அவர் எப்படியாவது அவரைக் கண்டுபிடித்துவிடுவார்."என தெரிவித்தார்.
இதேவேளை முன்னாள் காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்ந்து நீதிமன்றத்தைத் தவிர்த்து வந்தால், சட்ட விதிகளின்படி அவரது சொத்துக்களைப் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
5 நாட்கள் முன்