சிறையிலுள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் உயிருக்கு ஆபத்து!
ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற இருக்கை பாதுகாப்பானது என்றும், ஆனால் அவரது உயிருக்கு ஆபத்து உள்ளது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று காலை அங்குனகொளாபெலஸ்ஸ சிறைக்குச் சென்று நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் நிலை குறித்து சுக துக்கங்களை விசாரித்து அறிந்து கொண்டார்.
அதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய சட்ட நிலைமையை விளக்கிய சஜித் பிரேமதாஸ, சபாநாயகர், ரஞ்சன் ராமநாயக்கவை உடனடியாக நாடாளுமன்றத்திற்கு அழைத்து வர வேண்டும் என்று கூறினார்.
சிறையில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு உயிர் ஆபத்து உள்ளது என்றும், இந்த விஷயத்தில் அரசு உடனடியாக கவனம் செலுத்த வேண்டும். ரஞ்சன் ராமநாயக்கவுக்காக தனது கட்சி எப்போதும் முன் நிற்கிறது என்றும் சஜித் தெரிவித்துள்ளார்.




