கொரோனாவை ஒழிக்க இதுவே வழி!! இராதாகிருஸ்ணன் அட்வைஸ்
கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த சுகாதார துறையினரின் அறிவுறுத்தலை பின்பற்றுங்கள் - கொரோனாவை அரசியலாக பார்க்காதீர்கள் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுச்சாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் (16) நுவரெலியாவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
கொரோனா தொற்று என்பது சுகாதார துறையினருடன் தொடர்புடைய ஒரு விடயமாகும். எனவே அதனை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும்.என்ன நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
பொது மக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் போன்ற விடயங்களை நன்கு அறிந்தவர்கள் சுகாதார துறையினர். அவர்களுடைய வழிகாட்டலில் ஏனையவர்களின் உதவிகளை பெற்றுக் கொள்ள வேண்டும். அதனை விடுத்து சுகாதார துறையினரின் வழி காட்டல்கள் இல்லாமல் இதனை கட்டுப்படுத்த முடியாது.
கடந்த காலங்களில் எங்களுடைய நாட்டில் ஏற்பட்ட பல தொற்று நோயை கட்டுப்படுத்தியவர்கள் இந்த நாட்டின் சுகாதார துறையினர் - எனவே அவர்களிடம் இதனை கையளிப்பதே சிறந்தது.
நாடடில் யுத்தம் இருந்த கால கட்டத்தில் அதனை முப்படையினரே செய்தனர். அதற்க அவர்களுக்கு ஏனைய தரப்பினர் ஒத்துழைப்பு வழங்கினார்கள். யுத்தத்தில் சுகாதார துறையினரின் ஆலோசனைகளோ அல்லது அவர்களுடைய வழிகாட்டல்களோ இருக்கவில்லை.
ஏனெனில் சுகாதார துறையினருக்கு யுத்தம் தொடர்பாக எதுவும் தெரியாது. எனவே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வருகின்ற பொழுது கூறியவிடயமே யாருக்கு என்ன திறமை இருக்கின்றதோ அதற்கு ஏற்றவாறு சந்தர்ப்பம் வழங்கப்படும் என்று.
ஆனால் இன்று அது தலைகீழாக நடைபெறுகின்றது. எனவே இதனை உணர்ந்து சுகாதார துறையினரிடம் இந்தப் பொறுப்பை கையளித்து அவர்களுடைய வழிகாட்டலில் ஏனையவர்கள் சென்றால் மாத்திரமே இந்த தொற்றை எமது நாட்டில் இருந்து இல்லாதொழிக்க முடியும்.
அதனை விடுத்து சுகாதார துறையினருடன் ஒருவருக்கு ஒருவர் முரண்பாட்டுடன் நடந்து கொண்டால் இதனை கட்டுப்படுத்த முடியாது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.