ஐக்கிய மக்கள் சக்தியில் இணையும் புதிய நபர்
தேசபந்து, தேசமான்ய, கலாநிதி லெப்டினன்ட் கேணல் டபிள்யூ. டபிள்யூ.ரத்னபிரிய பந்து இன்று (01) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டுள்ளார்.
இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவால் உள்நாட்டு, வெளிநாட்டு தேசிய ஒற்றுமை, சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை உருவாக்கும் ஐக்கிய மக்கள் சக்தி குழுவின் பிரதானியாக அவர் இன்றைய தினம் நியமிக்கப்பட்டுள்ளார்.
1971 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி பிறந்த அவர்,மாத்தளை புனித தோமஸ் கல்லூரியில் தனது பாடசாலை படிப்பை தொடர்ந்ததோடு, பின்னர், கேடட்டாக இராணுவத்தில் இணைந்து கொண்ட அவர், உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பல கற்கைகளை பூர்த்தி செய்து, இராணுவ சேவைக்கு தேவையான உயர் தகுதிகளை பெற்றுக் கொண்டுள்ளார்.
இராணுவ சேவை
தொழில்முறை தகுதிகளுக்கு மேலதிகமாக, சமூகவியல் துறையில் கௌரவ கலாநிதி பட்டத்தையும் பெற்றுக் கொண்ட அவர், யுத்தத்தின் பின்னரான வடக்கு மக்களின் மீள்குடியேற்றத்தில் ஆற்றிய சேவை அளப்பரியதாகும்.
தனது 29 வருட இராணுவ சேவையின் போது, 2006-2009 காலப்பகுதியில் இலங்கை சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பயிற்சிப் பிரிவின் பணிப்பாளராக பணியாற்றி, சிவில் பாதுகாப்பு திணைக்களத்தை மறுசீரமைத்து, அவர்களை வடக்கு மற்றும் கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பணிக்கு அனுப்புதல், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஒன்றிணைந்த கட்டளைத் தளபதி, மன்னார் மாவட்டத்தில் 600 ஏக்கர் விசேட முந்திரிச் செய்கைத் திட்டத்தின் மேற்பார்வையாளர் போன்ற பதவி நிலை பணிகளை அவர் ஆற்றியுள்ளார்.
அதேபோன்று, தேசிய நலன்கருதி பாதுகாப்பு அமைச்சின் அனுமதியின் கீழ் புனர்வாழ்வளிக்கப்பட்ட எல்.டி.டி.ஈ உறுப்பினர்களை சிவில் பாதுகாப்பு திணைக்களத்திற்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டு, பல்வேறு திட்டங்களில் ஈடுபடுத்திய பணியையும் லெப்டினன்ட் கேணல் ரத்னபிரிய பந்து தலைமையிலயே மேற்கொள்ளப்பட்டது.
இது தவிர,சிங்க ரெஜிமென்ட்டின் 23 ஆவது படையணியின் கட்டளை தளபதி, 53 ஆவது படையணியின் முதல் நிலை அதிகாரி, மாதுரு ஓயா விசேட படைப் பயிற்சிப் கல்லூரியின் ஆலோசகர், மன்னார் பிரதேச தலைமையக இரண்டாம் தர பொது உத்தியோகத்தர் உட்பட பல பதவிகளை வகித்துள்ளார்.
இராணுவத்தில் பணியாற்றிய காலத்தில் அவர் காட்டிய திறமைக்கு, ரண விக்ரம,ரண சூர பதக்கங்கள் இரண்டு முறை வழங்கப்பட்டன. குடிமகன் விருது,ரிவிரெஸ செயற்பாட்டு விருது, பூர்ண பூமி பதக்கம் உள்ளிட்ட பல விருதுகளையும் பதக்கங்களையும் பெற்றுள்ளார்.
சாந்தனுக்கு மட்டக்களப்பில் அஞ்சலி் : ஓரணியில் மீண்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக செயற்பட்ட கட்சிகள்!
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |