இரத்தினபுரியில் பேருந்து - டிப்பர் நேருக்கு நேர் மோதல் : 11 பேர் காயம் : ஐவர் கவலைக்கிடம்
Ratnapura
Accident
Srilanka Bus
By Sindu
இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்து ஒன்றும் டிப்பர் ரக வாகனமொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் 11 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் ஐவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் குறித்த தனியார் பேருந்தில் சுமார் 50 பயணிகள் பயணித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
வைத்தியசாலையில் அனுமதி
விபத்தில் காயமடைந்தவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி