இணைந்து செயற்படத் தயார் - அழைப்பு விடுத்தார் மகிந்த அமரவீர
Mahinda Amaraweera
together
called
By Vanan
நாட்டின் நலன் கருதிச் செயற்படும் தரப்பினருடன் இணைந்து செயற்பட தயாராகவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர (Mahinda Amaraweera) தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர், தேர்தல் ஒன்றை வெற்றிக் கொள்ள வேண்டுமாயின் நிச்சயமாக கூட்டணி ஒன்றை அமைக்க வேண்டும்.
எனவே ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக நாடு தொடர்பில் சிந்திக்கும் எந்தவொரு தரப்பினரையும் இணைத்து கொள்ள தயார் என அவர் தெரிவித்துள்ளார்.