இலங்கை மக்களே அவதானம்..! பல இடங்களுக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை
பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலைமை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் இலங்கையின் சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பு மற்றும் காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை, பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் பயணிக்கும் பலநாள் கடற்றொழில் படகுகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு கிழக்கே வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலவும் குறைந்த காற்றழுத்தப் பிரதேசம் வடக்கு நோக்கிய சாய்வுடன் வடமேற்குத் திசையில் நகர்ந்து, இன்று (15) காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைய அதிக வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை
இதற்கமைய, குறித்த வானிலைத் தொகுதி நாளை (16) மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்பில் புயலாக வலுவடையக்கூடும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதன் காரணமாக, வட அட்சரேகை 5 முதல் 15 வரையிலும், கிழக்கு நெடுங்கோடு 80 முதல் 90 வரையிலும் அமைந்துள்ள கடற்பரப்புகளிலும், காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை, பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளிலும் மறு அறிவித்தல் வரை கடற்றொழில் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், ஏற்கனவே குறித்த கடற்பரப்புகளில் கடற்றொழில் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களை நோக்கிச் செல்லுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் அறிவுறுத்தியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |