ஹவுதி கிளர்ச்சியாளர்களால் இலாபமீட்டும் இலங்கை! வந்து குவியும் கப்பல்கள்

Kathirpriya
in பொருளாதாரம்Report this article
இலங்கைக்கு வரும் கொள்கலன் கப்பல்களின் எண்ணிக்கை 32 வீதத்தால் அதிகரிதிருப்பதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
செங்கடலில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகளே இந்த அதிகரிப்புக்கு காரணமாகம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார், இதனால் நாட்டின் வருமானமும் அதிகரித்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அதிகரித்து வரும் கொள்கலன் கப்பல்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப துறைமுகத்தை விரிவுபடுத்துவதற்கு சுமார் 580 மில்லியன் டொலர் செலவில் புதிய அபிவிருத்தி செய்யப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
கொழும்பு துறைமுகத்தின் அவசியம்
இந்த சந்தர்ப்பத்தில் சர்வதேசம் கொழும்பு துறைமுகத்தின் அவசியத்தை நன்றாக உணந்த்துள்ளதால், சரக்குக்கப்பல்களை அதிகளவில் கொழும்புக்கு வருகிறது.
தவிரவும், மேலும் பல கப்பல்கள் நாட்டிற்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது, இதனால் அதற்கு ஏற்றாற்போல் அனைத்து நடவடிக்கைகளும் தயார்ப்படுத்தப்பட்டு வருகின்றது.
செங்கடலின் நெருக்கடி நிலை இலங்கைக்கு இலாபத்தை அதிகளவில் ஈட்டித்தரலாம் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது என்பது இதன் ஊடாக தெளிவாகியுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
