தாக்கல் செய்த ரிட் மனு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
தம்மை கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர (Prasanna Ranaweera) தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரணையின்றி தள்ளுபடி செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
களனி பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள அரசாங்க காணியை சட்டவிரோதமாக கையகப்படுத்திய சம்பவம் தொடர்பாக பிரசன்ன ரணவீர குறித்த ரிட் மனுவை தாக்கல் செய்திருந்தார்.
நீதிமன்றின் உத்தரவு
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி மொஹமட் லாபர் தாஹிர் மற்றும் பிரியந்த பெர்னாண்டோ (Priyantha Fernando) ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா (Mervyn Silva) உள்ளிட்ட தரப்பினர் தற்போது மஹர நீதவான் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் பெலவத்தை, பத்தரமுல்லையில் வைத்து மார்ச் மாதம் 05 ஆம் திகதி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
