அரசியல் கைதிகளின் விடுதலை : அநுரவிடம் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்

Jaffna Anura Kumara Dissanayaka Harshana Nanayakkara
By Sathangani Jan 28, 2025 05:51 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

அரசியல் கைதிகளின் விடுதலை விடயத்தில் ஜனாதிபதி தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுப்பதாக சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சக்திவேல் (Rev.M.Sakthivel) தெரிவித்துள்ளார்.

அவர் இன்று (28) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் இந்திய (India)மற்றும் சீன (China) பிரயாணங்களைத் தொடர்ந்து நாடு உள்ளூராட்சி மன்ற தேர்தலை எதிர்நோக்கி இருக்கின்றது.

அரச வேலைவாய்ப்பு - வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரசின் கோரிக்கை

அரச வேலைவாய்ப்பு - வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரசின் கோரிக்கை

மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம்

இந்த நிலையில் யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ள அபிவிருத்திக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) எதிர்வரும் வெள்ளிக்கிழமை (31) வடக்கிற்கு வருகை தருவது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை பலப்படுத்தும் அரசியல் பயணமாக அமையாது தமிழர்கள் எதிர்நோக்கும் அரசியல், சமூக, பொருளாதார, கலாசார பிரச்சினைகளின் தீர்வுக்கு அடித்தளமிடும் விஜயமாக இருக்க வேண்டுமென வலியுறுத்துகின்றோம்.

அரசியல் கைதிகளின் விடுதலை : அநுரவிடம் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள் | Release Of Political Prisoners Request To Anura

விசேடமாக தமிழர் தாயகத்தில் மக்கள் முன் நின்று ஜனாதிபதி "அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள்" என நம்பிக்கை அளித்ததை நாம் மறக்கவில்லை.

ஆனால் அதனை மறுதலிக்கும் வகையில் அண்மையில் நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார (Harshana Nanayakkara) அரசியல் கைதிகள் என்று சிறைகளில் எவருமில்லை என தெரிவித்திருக்கையில் இது விடயத்தில் ஜனாதிபதி தனது நிலைப்பாட்டையும் அரசின் நிலைப்பாட்டையும் வெளிப்படுத்த வேண்டும்.

அத்துடன் அரசியல் கைதிகளின் விடுதலையை துரிதமாக்குமாறும் அதற்கான நாள் குறிக்குமாறும் கோரிக்கை விடுப்பதோடு அதற்கான துரித நடவடிக்கையை வெளிப்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

மகிந்தவின் சகாக்களை கைது செய்ய சதி : மொட்டு உறுப்பினர் பகிரங்கம்

மகிந்தவின் சகாக்களை கைது செய்ய சதி : மொட்டு உறுப்பினர் பகிரங்கம்

நிபந்தனை இன்றி விடுதலை 

மேலும் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தலைமையிலான எதிர்க்கட்சியும் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு நாம் எதிர்ப்பு தெரிவிப்பது இல்லை எனக் கூறியிருக்கும் சந்தர்ப்பத்தில் அதனை உரிய வகையில் பயன்படுத்தி அரசியல் கைதிகளை நிபந்தனை இன்றி விடுதலை செய்யுமாறு கேட்கின்றோம்.

அரசியல் கைதிகளின் விடுதலை : அநுரவிடம் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள் | Release Of Political Prisoners Request To Anura

முன்னாள் போராளிகள் மற்றும் நீண்ட நாள் சிறை கொடுமையின் பின்னர் நீதிமன்றத்தினால் குற்றமற்றவர்கள் என விடுதலை செய்யப்பட்ட அரசியல் கைதிகள் மீளவும் விசாரணை என அச்சுறுத்துவதும், கைது செய்யப்படுவதும் தடுத்து வைப்பதையும் நிறுத்துவதோடு அவ்வாறு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளோரை விடுதலை செய்யுமாறும் கேட்கின்றோம்.

அது மட்டுமல்ல தேசிய மக்கள் சக்தியும் நீங்களும் தெற்கின் மேடைகளில் அடிக்கடி பாராயணம் செய்யும் இலஞ்சம், ஊழல், அரசியல்வாதிகளின் மோசடி என்பவற்றை மீண்டும் வடக்கு அபிவிருத்தி குழு கூட்டத்தில் பேசி மக்களை பொது மயக்க நிலைக்கு தள்ளாது வடக்கு கிழக்கு தமிழர்களின் தேசியத்திற்கு தடையாக இருக்கும் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் அரச பயங்கரவாத செயற்பாடுகளை கிளீன் செய்வதற்கான உத்தரவாதத்தை வெளிப்படுத்துவதும் வடக்கின் அபிவிருத்திக்கு துணையாக அமையும்.

அபிவிருத்தி என்பது பாதைகள் அமைத்தல், கட்டிடங்களை நிர்மாணித்தல், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், பல புதிய சமூக நலத் திட்டங்களை முன்வைப்பதாக கூறுவது மட்டுமல்ல உண்மையான அபிவிருத்தி, மக்கள் மனதில் அரசியல் நம்பிக்கையை பலப்படுத்தி தமிழர்களின் தேசியத்தின் தூண்களை காப்பதிலும் தங்கி இருக்கின்றது என்பதே எமது நம்பிக்கை.

யாழ். கடற்பரப்பில் பரபரப்பு சம்பவம் - துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயம்

யாழ். கடற்பரப்பில் பரபரப்பு சம்பவம் - துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயம்

 தேசிய மக்கள் சக்தி 

ஆனால் இந்த தூண்களை திட்டமிட்ட வகையில் பெரும் தேசியவாதம் அழித்துக் கொண்டு வெளிநாட்டு முதலீடுகள் மூலம் எமது தாயகத்தில் துறைமுகங்களின், விமான நிலையங்களின் அபிவிருத்தி என அயலக அரசியல் சக்திகளின் அதிகாரத்திற்கு இடமளித்து எமது அரசியல் அபிலாசைகளை மண்தோண்டி புதைப்பதை ஏற்றுக் கொள்ளவும் முடியாது அபிவிருத்தி என மகிழவும் இயலாது.

அரசியல் கைதிகளின் விடுதலை : அநுரவிடம் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள் | Release Of Political Prisoners Request To Anura

முன்னாள் ஜனாதிபதிகளை போன்று தேசிய மக்கள் சக்தியாகிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் தற்போதைய ஜனாதிபதியுமாகிய அநுரகுமார திசாநாயக்கவும் இந்திய மற்றும் சீன விஜயங்களில் பல்வேறு உடன்படிக்கைகளை செய்ததற்குப் பின்னால் அரசியலே உள்ளது எவரும் அறிவர்.

தமிழர் தாயகத்திலும் அபிவிருத்தி என தாயக அரசியலை அழிப்பதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால் தொடர்ந்து அதுவே நடக்கிறது. இவ்வாறு அழிப்பதற்கு இடம்கொடுப்பது முழு நாட்டின் அரசியலையும் இறைமையையும் அழித்துவிடும் என்பதையும் இச்சந்தர்பத்தில் நினைவுறுத்த விரும்புகிறோம்“  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதை ஒழிப்பு விவகாரம் : யாழ் பல்கலை கலைப்பீடத்தின் பின்னால் தமிழ் மக்களை அணிதிரள அழைப்பு

போதை ஒழிப்பு விவகாரம் : யாழ் பல்கலை கலைப்பீடத்தின் பின்னால் தமிழ் மக்களை அணிதிரள அழைப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 

   

ReeCha
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, நாவற்குழி, கொழும்பு

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொக்குவில், Toronto, Canada

19 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Markham, Canada

07 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டகப்புலம், London, United Kingdom

28 Jul, 2015
அகாலமரணம்

மீரிகம, யாழ்ப்பாணம், Noisy-le-Grand, France

30 Jun, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, Datteln, Germany, Olfen, Germany

23 Jul, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

25 Jul, 2005
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காரைநகர்

27 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், உருத்திரபுரம்

23 Jul, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வடமராட்சி, London, United Kingdom

23 Jun, 2025
மரண அறிவித்தல்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைதீவு, ப்றீமென், Germany

26 Jul, 2020
மரண அறிவித்தல்

காரைநகர், North Carolina, United States

23 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

kilinochchi, London, United Kingdom

06 Aug, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Meschede, Germany

23 Jul, 2025
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, சமரபாகு

25 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Chenevières, France

21 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
15ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
மரண அறிவித்தல்

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Woodbridge, Canada

29 Jul, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Bowmanville, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024