யாழில் வைத்தியரை தாக்கிய சந்தேகநபர்களுக்கு நீதிமன்றின் அதிரடி உத்தரவு
Sri Lanka Police
Jaffna
Sri Lankan Peoples
By Dilakshan
யாழ்ப்பாணம் - உரும்பிராய் பகுதியில் வைத்து வைத்தியர் ஒருவரை தாக்கிய மூவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 17.09.2025 அன்று இரவு வைத்தியர் ஒருவர் உரும்பிராய் சந்தியில் பயணித்துக் கொண்டிருந்தபோது அவர் மீது ஒரு குழுவினர் தாக்குதல் நடத்தியிருந்தனர்.
பின்னர் குறித்த வைத்தியர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
கைது நடவடிக்கை
இவ்வாறான சூழ்நிலையில் தாக்குதலை மேற்கொண்ட மூவர் நேற்றையதினம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
அதன்பின்னர், இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அவர்களை திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
