சாவகச்சேரி உப தவிசாளர் பதவி நீக்கம்... இடைக்காலத் தடை விதிக்கக் கோரி மனு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

Northern Province of Sri Lanka Local government Election Nagalingam Vedanayagam
By Theepan Jul 06, 2026 11:02 AM GMT
Report

சாவகச்சேரி நகரட்சி மன்ற உப தவிசாளர் மற்றும் சபையின் உறுப்புரிமையிலிருந்து தன்னை நீக்கி வட மாகாண ஆளுநரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யக் கோரியும், அதற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரியும் ஞானப்பிரகாசம் கிஷோர் தாக்கல் செய்த முறையீட்டு மனு தொடர்பில் நீதிமன்றம் உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது.

இன்றைய தினம் (06.07.2026) குறித்த மனுவை ஆராய்ந்த வடக்கு மாகாண மேல்நீதிமன்றத்தின் யாழ்ப்பாண அமர்வு இடைக்காலத் தடைக்கட்டளை வழங்க மறுத்துள்ளது.

முன்னதாக, கடந்த 19.06.2026 ஆம் நாளிட்டு 24.06.2026 அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி ஊடாகத் ஆளுநர் தன்னை பதவி நீக்கம் செய்திருந்தமைக்கு எதிராக உப தவிசாளர் கிஷோர், கடந்த சனிக்கிழமை (04.07.2026) அன்று வடக்கு மாகாண மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

நீர்கொழும்பு சிறையில் காயமடைந்தோர் எண்ணிக்கை 100ஆக அதிகரிப்பு!

நீர்கொழும்பு சிறையில் காயமடைந்தோர் எண்ணிக்கை 100ஆக அதிகரிப்பு!

தாக்கல் செய்யப்பட்ட மனு

தனிநபர் விசாரணை அதிகாரி க.அரியநாயகத்தின் அறிக்கை, சாவகச்சேரி நகராட்சி மன்றம் முழுவதையும் கலைக்குமாறு பரிந்துரைத்திருந்த போதிலும், அதனை மீறித் தன்னை மட்டும் ஆளுநர் பதவி நீக்கியது ஏன் என்ற கேள்வியையும், சபை நடுவே வணிகர்களின் நலனுக்காகத் தான் பேசிய கருத்துரிமை மீறப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டி, சட்டத்தரணி கு.குருபரனினால் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

சாவகச்சேரி உப தவிசாளர் பதவி நீக்கம்... இடைக்காலத் தடை விதிக்கக் கோரி மனு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு! | Removal Of Chavakachcheri Mc Deputy Chairman Issue

இன்றைய தினம் (06.07.2026) இந்த மனு இடைக்காலத் தடைக்கட்டளைக்காக நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, முறையீட்டாளர் சார்பில் மிக நீண்ட நேரம் சமர்ப்பணங்கள் முன்வைக்கப்பட்டன.

கிஷோருக்கு எதிராக எந்தவிதமான ஊழல் குற்றச்சாட்டுகளும் இல்லை என்பதும், 2010 ஆம் ஆண்டுக்கு முன்னர் போர்க்காலத்தில் கட்டப்பட்டு இணக்கச் சான்றிதழ் பெறப்படாத கட்டடங்களைக் கொண்ட பெரும்பாலான வர்த்தகர்கள் சாவகச்சேரியில் பாதிக்கப்படுவார்கள் என்ற காரணத்தினாலேயே, இணக்கச் சான்றிதழைக் கட்டாயப்படுத்தக் கூடாது என நகராட்சி மன்றக் கூட்டத்தில் அவர் உரையாற்றியிருந்தார் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் : வெளிக்கிளம்பிய சிறை நெரிசல் பிரச்சனை

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் : வெளிக்கிளம்பிய சிறை நெரிசல் பிரச்சனை

ஆளுநரின் தலையீடு

நகராட்சி மன்றக் கட்டளைச் சட்டத்திற்கு உட்பட்டு ஆற்றப்பட்ட இந்த உரையின் காரணமாக அவரை நீக்கியது ஜனநாயகப் படுகொலை எனவும், நகராட்சி மன்றங்களின் அதிகாரத்தில் ஆளுநர் தலையிடுவதாகும் எனவும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

மனுதாரர் தரப்பின் நீண்ட வாதங்களைச் செவிமடுத்த வடக்கு மாகாண மேல் நீதிமன்றத்தின் யாழ்ப்பாண அமர்வு நீதிபதி க.சதீஸ்வரன், எதிர்மனுதாரர்களான வட மாகாண ஆளுநர், உள்ளூராட்சி ஆணையாளர், தனிநபர் விசாரணை அதிகாரி உள்ளிட்டோருக்கு அறிவித்தல் அனுப்ப இணங்கிய போதிலும், இடைக்காலத் தடைக்கட்டளையை வழங்க மறுத்துத் தீர்ப்பளித்தார்.

சாவகச்சேரி உப தவிசாளர் பதவி நீக்கம்... இடைக்காலத் தடை விதிக்கக் கோரி மனு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு! | Removal Of Chavakachcheri Mc Deputy Chairman Issue

மற்றைய தரப்பினரின் வாதங்களையும் கேட்டே முடிவுகளை மேற்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்ட நீதிபதி, முகத்தோற்றமளவில் ஆளுநர் நடைமுறைமுறைகளைப் பின்பற்றியே முடிவுகளுக்கு வந்துள்ளார் எனவும், இக்கட்டத்தில் இடைக்காலத் தடைகளை வழங்குவது பிழையான முன்னுதாரணங்களை ஏற்படுத்துவதாக அமையும் எனவும் தனது கட்டளையில் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவு குறித்துக் கருத்துத் தெரிவித்த முறையீட்டாளரின் சட்டத்தரணி கு.குருபரன், நீதிமன்றத்தின் இக்கட்டளையைத் தாம் மதிப்பதாகவும், எனினும் இடைக்காலக் கட்டளைகளை மறுத்தமைக்கான நியாயமான காரணங்கள் இன்றைய கட்டளையில் இல்லை என்பதால் இதற்கு எதிராகப் பொருத்தமான மாற்று வழிகளை தாம் நாட உள்ளதாகத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்தார்.

டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்

டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்