சற்றுமுன்னர் வெளியான தகவல் -அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கம் -வர்த்தமானி அறிவிப்பும் இரத்து
rice
remove
controlprice
By Jaso
அரசாங்கத்தினால் அரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையை நீக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இன்றிரவு (27) அமைச்சரவை கூடிய நிலையில், இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இதன்படி, அரிசிக்கான ஆகக்கூடிய மொத்த மற்றும் சில்லறை விலைகளை நிர்ணயித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலையும் இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஒரு இலட்சம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு, அமைச்சரவையினால் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கு அனுமதி வழங்கப்பட்டதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி