மட்டக்களப்பில் சாணக்கியன், சிறிநேசன் உட்பட எழுவருக்கு எதிராக தடையுத்தரவு
மட்டக்களப்பில் (Batticaloa) சுதந்திர நிகழ்வுகளை பாதிக்கும் வகையில் எந்தவொரு ஆர்பாட்டங்களையும் மேற்கொள்வதற்கு எதிராக ஏழு நபர்களுக்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு தலைமை காவல்நிலைய பொறுப்பதிகாரியினால் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையின் பிரகாரம், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மட்டக்களப்பு காந்தி பூங்கா பிரதேசத்தில் நடைபெற இருக்கும் சுதந்திரதின நிகழ்வுகளை பாதிக்கும் வகையிலான எந்தவொரு ஆர்பாட்டத்தையோ சட்டவிரோத செயற்பாடுகளையோ மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நியாயாதிக எல்லைக்குட்பட்ட எந்தவொரு பகுதியிலும் மேற்கொள்ளக் கூடாதென குறித்த நபர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தேசிய தின கொண்டாட்டம்
அத்தோடு, இலங்கை குடியரசின் தேசிய தினம் கொண்டாடப்படவேண்டியது என இலங்கை ஜனநாயக குடியரசின் அரசியலமைப்பின் 08 வது சரத்தில் கூறப்பட்டுள்ளமையும் தடையுத்தரவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நபர்களின் பெயர்கள் பின்வருமாறு,
- சபாரத்தினம் சிவயோகநாதன் அல்லது சீலன் (இணையம் அரச சார்பற்ற குழுவின் தலைவர்)
- ஞானமுத்து சிறிநேசன் (நாடாளுமன்ற உறுப்பினர், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு)
- இராசமாணிக்கம் சாணக்கியன் (தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் )
- அமலன் அமலநாயகி (காணாமல் மட்டக்களப்பு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி)
- இளையதம்பி சிறிநாத்
- சகாயராசா சுகந்தினி
- இருதயம் செல்வக்குமார் அல்லது செல்வா
மேற்குறிப்பிடப்பட்ட நபர்களுடன் சேர்ந்து செயற்படும் வேறு எவரேனும் நபர்கள்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |