இலங்கைக்கான வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளால் ஏற்பட்டுள்ள சிக்கல்!

Sri Lanka IMF Sri Lanka vehicle imports sri lanka
By Sathangani Jul 11, 2026 10:37 AM GMT
Report

இலங்கைக்கு வாகனம் இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ கருத்து வெளியிட்டுள்ளார்.

அதன்படி, வாகன இறக்குமதிக்கு கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம் சந்தையில் கடுமையான சிக்கல்கள் உருவாகும் அபாயம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

நாட்டின் வாகனத் தேவை தற்போது ஓரளவிற்குப் பூர்த்தியாகியுள்ளதால், கடந்த ஆண்டை விட இம்முறை வாகன இறக்குமதியின் மூலம் கிடைக்கும் வரி வருமானம் வீழ்ச்சியடையும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாடொன்றின் விமான நிலையத்தில் சிக்கிய இலங்கை குடும்பம்! அம்பலமான பெரும் திட்டம்

வெளிநாடொன்றின் விமான நிலையத்தில் சிக்கிய இலங்கை குடும்பம்! அம்பலமான பெரும் திட்டம்

சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதிக்குப் பிறகு வாகன இறக்குமதி கொள்கையை நீட்டிப்பதா? இல்லையா? என்பது குறித்து அரசாங்கம் எடுக்கவிருக்கும் தீர்மானம் இதில் மிக முக்கியமானது.

இலங்கைக்கான வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளால் ஏற்பட்டுள்ள சிக்கல்! | Restrictions On Vehicle Imports To Sri Lanka

சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கைகளின்படி மேலதிக கூடுதல் கட்டணங்களை விதிக்க முடியாது என்றாலும், அரசாங்கம் இந்த கூடுதல் கட்டணங்களை நீக்கினால் மீண்டும் சந்தையில் ஒருவித அதிர்வு ஏற்பட வாய்ப்புள்ளது.

கடந்த காலங்களில் இருந்த வாகனங்களுக்கான கடும் தேவை தற்போது பெரும்பாலும் பூர்த்தியாகியுள்ளதாலும், இறக்குமதியாளர்கள் தேவையான அளவு வாகனங்களை இறக்குமதி செய்துள்ளதாலும் வாகனப் பதிவுகள் படிப்படியாகக் குறைந்து வருகின்றன. இதன் விளைவாக, வாகன இறக்குமதி வரி வருமானம் கடந்த ஆண்டின் நிலையை எட்டாது.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்த பெண் கைதிகள் குறித்து வெளியான தகவல்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்த பெண் கைதிகள் குறித்து வெளியான தகவல்

 வரிகளை அறவிடுதல் 

தற்போது வாகனங்களுக்கு 150 சதவீதம் மற்றும் 200 சதவீதம் போன்ற மிக அதிக இறக்குமதி வரி விதிக்கப்படுவதால், தொடர்ந்து இத்தகைய வரிகளை விதிப்பது நியாயமற்றது.

இலங்கைக்கான வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளால் ஏற்பட்டுள்ள சிக்கல்! | Restrictions On Vehicle Imports To Sri Lanka

அரசாங்கம் ஒரே தரப்பினரிடமிருந்து தொடர்ந்து வரிகளை அறவிட்டு அவர்களைச் சிரமத்திற்கு உள்ளாக்காமல், அரச செலவினங்களைச் சரியாக முகாமைத்துவம் செய்ய வேண்டும்.

பொருளாதார வளர்ச்சிக்கான அத்தியாவசிய சீர்திருத்தங்களை விரைவுபடுத்துவதன் மூலம் வரி வருவாயை ஓரளவிற்கு அதிகரிக்க முடியும், இதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் முன்னோக்கிச் செல்லும் என்ற வலுவான சமிக்ஞையைச் சந்தைக்கு வழங்க முடியும்“ என அவர் மேலும் தெரிவித்தார்.

ஜூன் மாதத்தில் இலங்கைக்கு கிடைத்த 695 மில்லியன் அமெரிக்க டொலர்!

ஜூன் மாதத்தில் இலங்கைக்கு கிடைத்த 695 மில்லியன் அமெரிக்க டொலர்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026