பின்வாங்கும் இஸ்ரேல்! இடிபாடுகளில் இருந்து மீட்க்கப்பட்ட உடல்கள்
Israel
World
Gaza
By Dharu
இஸ்ரேலிய இராணுவம் காசா நகரின் சில பகுதிகளில் இருந்து பின்வாங்கிய நிலையில் இடிபாடுகளில் இருந்து 19 பாலஸ்தீனியர்களின் உடல்கள் மீட்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விடயத்தை அல்-ஷிஃபா மருத்துவமனையின் இயக்குநர் வைத்தியர் முகமது அபு சல்மியா குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி போர் தொடங்கியதிலிருந்து 67,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மனித உரிமை
ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பல மனித உரிமை அமைப்புகளுடன் சேர்ந்து, உண்மையான இறப்பு எண்ணிக்கை ஆயிரக்கணக்கானதாக இருக்கலாம் என்று மதிப்பிடுகிறது.
அத்தோடு இஸ்ரேலிய இராணுவம் செயல்பட்டு வந்த பகுதிகளில் இருந்து உடல்களை மீட்க முடியாததாலும், இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிய உடல்களை மீட்பதில் சிரமங்கள் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்