கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு
Corona
Recovered
Deaths
By Mkkamshan
இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 474 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 542,015 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 566,197 அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14,619 ஆக அதிகரித்துள்ளது.
தினமும் சராசரியாக 725 நபர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகின்றமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்