காவல்துறை அதிகாரி ஊடாக கெஹல் பத்மேவுக்கு சென்ற தகவல் அம்பலம்
இந்தோனேஷியாவில் தங்கியிருந்த பாதாள உலக குழுவைச் சேர்ந்த கெஹல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சலிந்த உள்ளிட்ட குற்றவாளிகளைக் கைது செய்ய உதவி காவல்துறை அத்தியட்சகர் ரோஹன் ஒலுகல இந்தோனேசியாவுக்கு சென்ற தகவல் காவல் துறையின் ஒரு அதிகாரிமூலம் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தற்போது அவர்கள் மீது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் போது இந்த விடயத்தை பத்மே தெரிவித்துள்ளார்.
சிவப்பு எச்சரிக்கையும் பத்மேவுக்கு இரகசியமாக அறிவிப்பு
இதேவேளை கெஹல்பத்தர பத்மேவைக் கைது செய்வதற்காக யினரால் பிறப்பிக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கையும் இலங்கை காவல்துறை ஊடாக பத்மேவுக்கு இரகசியமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதவி காவல்துறை அத்தியட்சகரான ஒலுகல கடந்த சில நாட்களாகவே தென்படவில்லை என தருண் என்ற குற்றவாளிக்கு காவல்துறை ஊடாக இரகசியமாக தகவல் வழங்கப்பட்டுள்ளது.
காவல்துறை அதிகாரி இந்தோனேஷியாவில்
இதனையடுத்து அவரது தொலைபேசி இலக்கத்தின் ஐ.பி எண்ணை வைத்து தருண் ஆராய்ந்ததாகவும், அதன் மூலம் ஒலுகல இந்தோனேசியாவில் இருப்பது அறிந்து அந்த தகவல் பத்மேவுக்கு வழங்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
அதன்படி, இது குறித்து தகவல் கிடைத்த கெஹல்பத்தர பத்மே, கமாண்டோ சாலிந்த மற்றும் குடு நிலங்க ஆகியோர் அதுவரை அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து வெளியேறவிருந்தபோது கைது செய்யப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.
இதேவேளை கெஹல்பத்தர பத்மேவை கைது செய்ய சர்வதேச காவல்துறை மூலம் பிறப்பிக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கையின் படம் கெஹல்பத்தர பத்மேவின் கைபேசியில் இருந்தமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
