உக்ரைனின் முக்கிய நகரமொன்றை தன்வசப்படுத்திய ரஷ்யா: புடின் அறிவிப்பு
உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள முக்கிய நகரமான போக்ரோவ்ஸ்க்கை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்துள்ளாா்.
இது தொடர்பில் அவர் அறிக்கையொன்றை காணொளியாக வெளியிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளதாவது, “போக்ரோவ்ஸ்க் மற்றும் காா்கிவ் பகுதியின் வோவ்சான்ஸ்க் நகரங்கள் உக்ரைனிடம் இருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டன.
இராணுவ நடவடிக்கை
இது நமது சிறப்பு இராணுவ நடவடிக்கையின் ஆரம்ப இலக்குகள் அடையப்படுவதை அடுத்தகட்டத்துக்கு இட்டுச் செல்லும்” என அவர் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்கா மேற்கொண்டு வரும் தீவிர முயற்சிகளின் ஒரு பகுதியாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் சிறப்பு தூதா் ஸ்டீவ் விட்காஃப் மாஸ்கோ வந்து புடினுடன் பேச்சுவாா்த்தை நடத்துவதற்கு முன்பாக இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |