எதிர்வினை தாக்குதலை முறியடித்த ரஷ்யா - தோல்வியில் முடிந்த உக்ரைனின் நகர்வு
சிறப்பு ராணுவ நடவடிக்கை என பெயரிட்டு கடந்த ஆண்டு ரஷ்யாவினால் உக்ரைன் மீது மேற்கொண்ட இந்த ஆக்ரமிப்பு இன்று 530 நாட்களை கடந்தும் நடைபெற்றுக்கொண்டுள்ளது.
ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிற்கு எதிர்வினையாக உக்ரைன், அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகளின் பொருளாதார மற்றும் ஆயுத உதவிகளை கொண்டு ரஷ்யாவை தீவிரமாக எதிர்த்து வருகிறது.
இந்த போர் இரு தரப்பிலும் வீடுகளும், கட்டிடங்களும் சேதமடைந்து பல அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவதும் நிகழ்ந்தேறிய வண்ணம் உள்ளது.
இந்நிலையில் அண்மையில் சில மாதங்களாக டிரோன் எனப்படும் ஆளில்லா விமானங்களை அதிகளவில் பயன்படுத்தி இரு நாடுகளும் தாக்குதல்களை நிகழ்த்தி வருகின்றன.
மொஸ்கோவை நோக்கி ஏவபட்டது

இவ்வாறு உக்ரைனினால் இரண்டு டிரோன்கள் ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவை நோக்கி ஏவபட்டது. அவை ரஷ்யாவின் விமானப்படையினால் தாக்கி அழிக்கப்பட்டது.
மொஸ்கோவின் தெற்கு பகுதியில் உள்ள டொமோடிடோவோ (Domodedovo) பகுதியின் மீது ஏவப்பட்ட ஒரு டிரோனை ரஷ்யா இடைமறித்து வீழ்த்தியது.
அதேபோல் ரஷ்யாவின் தலைநகரின் மேற்கு பகுதியில் உள்ள மின்ஸ்க் நெடுஞ்சாலையின் மேலே இன்னொரு டிரோனையும் ரஷ்யா இடைமறித்து வீழ்த்தியது.
வீழ்த்தப்பட்ட டிரோன்களின் பாகங்கள் தாக்கப்பட்டு காயமடைந்ததாகவோ அல்லது உயிர்ச்சேதம் ஏற்பட்டதாகவோ இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை .
ரஷ்யாவின் மொஸ்கோ நகரைக் குறிவைத்து ஒரே வாரத்தில் 3-வது முறையாக உக்ரைன் தாக்குதல் நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.